அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் இலங்கை எம்.பி சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும் -தமிழக காங்கிரஸ்

Read Time:2 Minute, 55 Second

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் இலங்கை எம்.பி சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியை சேர்ந்தவர் சிவாஜிலிங்கம். இவர் தற்போது யாழ்ப்பாணப் பகுதி எம்.பி.யாக இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழகம் வந்திருந்த இவரை மத்திய அரசு உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இவர் தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வதாக தெரிகிறது.  இதனால் மீண்டும் அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம்இ பிரதமர் மன்மோகன்இ வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிஇ உள்துறை அமைச்சர் சிதம்பரம்இ தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளார். அதில், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம்இ இந்திய அரசியல்வாதிகளை போல தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இது தவறானது. சர்வதேச பாஸ்போர்ட் விதிகளின்படியும் வேறு நாட்டை சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றொரு நாட்டு அரசியலில் தலையிடக் கூடாது. ஆனால், சிவாஜிலிங்கம் இந்த இரண்டு விதிமுறைகளை மீறிவிட்டார். அவர் தற்போது தென்சென்னை பாஜக வேட்பாளர் இல.கணேசனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல்இ காங்கிரஸ் தலைவர்களைப் பற்றியும்இ மத்திய மற்றும் தமிழக அரசுகள் பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது பிரசாரம் செய்து வருகிறார். அவரது நடவடிக்கை கடுமையான தண்டனைக்கு உரியதும் ஆகும். எனவேஇ இந்திய அரசியலில் குழப்பம் விளைவிக்கும் முயன்றுள்ள சிவாஜிலிங்கத்தின் பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என தந்தியில் சுதர்சனம் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவீடன் வெளிவிவகார அமைச்சின் வீஸா விண்ணப்பம் மறுக்கப்படவில்லை -இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு
Next post இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு கூடாரங்கள் யூ.என்.எச்.ஆர்.சி அனுப்பி வைப்பு