பாதுகாப்பு வலய பிரதேசத்தில் 7 தற்கொலைத் தாக்குதல்கள்.. 24 மணி நேரத்தினுள் சம்பவம்

Read Time:3 Minute, 3 Second

பாதுகாப்பு வலய பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள் மாத்திரம் புலிகள் ஏழு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வலைஞர் மடத்திற்கு தெற்கே இரட்டை வாய்க்கால் பிரதேசத்தில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த மிகப் பாரிய மண் அணையை படையினர் கைப்பற்றியதை அடுத்தே புலிகள் இந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்றது. கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில், இரட்டை வாய்க்கால் பிரதேசத்தில் முன்னேறிவரும் படையினரின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் தனது உடம்பில் வெடிகுண்டுகளை பொருத்திய நிலையில் படையினரை நோக்கி வந்த நான்கு தற்கொலை குண்டுதாரிகள் குண்டை வெடிக்க வைத்துள்ள அதேசமயம், அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும், ஒரு கப் வண்டி ஒன்றும், படையினரை நோக்கி வந்து வெடிக்கச் செய்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். கனரக ஆயுதங்களை பாவிக்காததால் இந்தச் சம்பவத்தில் பல இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பல வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களை மீட்டும் பாரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினரின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையிலேயே புலிகள் இந்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “பாதுகாப்பு வலய பிரதேசத்தில் 7 தற்கொலைத் தாக்குதல்கள்.. 24 மணி நேரத்தினுள் சம்பவம்

  1. Toronto police arrested 15 people this afternoon(29.04.2009) as hundreds of members of Toronto’s Sri Lankan Tamil community continued to protest outside the U.S. consulate. At about 4:30 p.m., protesters attempted to push north on University Ave. past a barrier at Dundas St. and a scuffle broke out as officers quickly moved to contain the crowd. .

    After the protesters were arrested, others began to chant demanding their release. One officer was overheard speaking to one of the protest leaders saying that the individuals who fought with police will be charged. Meanwhile, police say that University will remain closed between Dundas St. W. and Queen St. W. through tomorrow morning’s rush hour.

    The number of protesters grew throughout the morning and by noon close to 1,000 people were sitting on the street or standing near its edge. The crowd, led by young speakers, chanted “Sri Lanka, stop killing” and “President Obama, save the Tamils.” Banging drums, waving flags and calling for a “permanent ceasefire” in Sri Lanka, the group has vowed to remain until the Canadian and U.S. governments and the United Nations intervene.

    A driving rain reduced the crowd to about 100 people yesterday morning but the number of protesters swelled as the weather got better. University Ave. has been shut down since Sunday after thousands of Tamils flooded the streets in response to news that the Sri Lankan government had rejected calls for a ceasefire from the Liberation Tigers of Tamil Eelam, or Tamil Tigers. Police have blocked off the northbound lanes and say that protesters will be allowed to remain unless they pose a threat to public safety.

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் மாணவி கடத்தல்; பெற்றோர் உறவினர் ஆர்ப்பாட்டம்.. குற்றவாளிகளை பிடிக்க அமைச்சர் கருணாஅம்மான் வேண்டுகோள்
Next post பிரபாகரன் புதுமாத்தளனில்.. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை டிச.31க்கு முன் மீள்குடியேற்ற முடிவு.. செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் போகொல்லாகம