பிரபாகரனை காப்பாற்ற வெளிநாடுகள் முயற்சி -பிரதமர் தெரிவிப்பு

Read Time:55 Second

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர் என பிரதமர் ரத்னசிறி விக்கரமநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார் இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது எங்களது வீட்டுப்பிரச்சினையை நாமே பார்த்துக் கொள்ளுவோம் அதற்கு ஒற்றுமையே தேவைப்படுகிறது. புலிகளின் தலைவர் பிரபாகரன் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் இச்சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்காக சர்வதேசத்தினர் இலங்கை வருகின்றனர் எவருடைய அழுத்தங்களுக்கும் அரசு அடிபணியப் போவதில்லை என அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “பிரபாகரனை காப்பாற்ற வெளிநாடுகள் முயற்சி -பிரதமர் தெரிவிப்பு

  1. இப்போது புலிகளைக் காப்பாற்றா விட்டால், தமிழ்வீரக் கனவுகளுக்குப் பங்கம் வந்துவிடுமேயென்ற பதற்றமே போர்ச்சூழலுக்கு வெளியே பொங்கிப் பிரவகிக்கிறது. புலிகள் அழிந்துவிட்டால் இலங்கையில் தமிழ்மக்கள் இருக்கவே முடியாது என்ற பாசிசப் பரப்புரைக் குரலே இன்று அனைவரும் பங்கேற்க வேண்டிய தமிழபிமான எழுச்சியாக முடுக்கிவிடப்படுவது தெரிகிறது.

    தமிழ்மக்களைப் புலிகளின் பிடிக்குள் வைத்துத் தொடர்ந்தும் அழித்துமுடிப்பதே மிகச்சிறந்த தமிழுணர்வாகத் தாங்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். இலங்கைக்கு வந்து குறைந்தபட்சம் வவுனியா வரைக்குமாவது சென்று பார்க்காமல், மக்களுடன் பேசாமல், நிலைமைகளை நேரில் அறியாமல், வதந்திகளால் கிளர்ச்சியுற்றுப் பொங்குகிற கும்பல் மனோநிலைக்குள் இருந்துகொண்டு, உண்மைநிலையைத் தெரிவிக்க முற்படுகிறவர்கள் மீது கோபம் கொள்கிறார்கள். நேரில் வந்து பார்த்து நிலைமை விளங்கிச் செல்வோர் மிகச் சிறுபான்மையினராக இருப்பதால், அவர்கள் சொல்வதையெல்லாம் பெரும்கூச்சலுக்குள் அமுக்கிவிட்டுத் தமிழாவேசம் பொங்கிப் பிரவகிக்கிறது – தமிழர்களை அழித்து முடிப்பதற்காக!

    ஐ.நா. தூதுவர், ஏனைய உலகநாட்டுத் தூதுவர்கள் என இங்குள்ள நிலைமையை நேரில் பார்த்துவிட்டுப் பேசுகிறவர்கள், புலிகள் அச்சுறுத்தித் தம்மோடு வைத்திருக்கும் மக்களை விடுவித்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார்கள். இது நம் தமிழாவேச மேளாவினருக்கு வேம்பாகக் கசக்கிறது.

    எந்த நோவுமில்லாமல் தூர இடங்களிலிருந்துகொண்டு தமிழ்வீர இறும்பூதடைந்து கொண்டிருக்க அவர்களுக்கு யுத்தம் தொடர்ந்து தேவையாயிருக்கிறது. அதற்கு புலிகள் காப்பாற்றப்பட வேண்டும். புலிகள் காப்பாற்றப்பட, மக்கள் அவர்களுக்கு அரணாக நின்று அழிவதுகூடச் சரியானதே என்ற குரூரம்வரை இந்தப் பழிவாங்கல் ஆவேசம் சென்றுவிட்டது. உயிரழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்ய வேண்டும் என்ற எளிய ஆலோசனையைக் கூடச் சொல்லாமல் பதிலுக்கு எதிரியைப் பிசாசாக்கி அரற்றுவதுதான் மக்கள் அழிவைத் தவிர்க்க இருக்கும் ஒரே வழியாக மாய்மாலம் செய்கிறார்கள்.

    யுத்தத்தை நிறுத்திப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு இந்தியாவும் உலக நாடுகளும் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று சொல்வதையே, அதிகபட்ச மனிதாபிமான முழக்கமாகப் பல புத்திஜீவிகளும் பிரச்சினையைப் புதிதாக அறிந்தவர்களைப் போல பேசுவதைக் காணமுடிகிறது.

    ராஜதந்திர ரீதியில் இந்த அழுத்தத்தை இலங்கை அரசுக்குக் கொடுப்பதில் இந்தியாவுக்கோ ஏனைய உலகநாடுகளுக்கோ பெரிய சிரமம் ஒன்றும் இருப்பதற்கில்லை. இந்தியா ஏற்கனவே இலங்கை அரசுக்குக் கொடுத்த அழுத்தத்தின் ஒரு வகைதான் தமிழ்க்குழுக்களுக்கான பயிற்சியும் ஆயுதங்களும். ஏனைய உலகநாடுகளும், வருடாவருடம் உதவி வழங்கக் கூடும் மாநாட்டில் இறுக்கிப் பிடித்து இலங்கையரசைப் பணியவைத்துவிடலாம். எவராலும் புலிகளைக் கையாள முடியாமல் போன தோல்வியே, எல்லோருமாய்ச் சேர்ந்து நடத்தும் இன்றைய யுத்தம் என்பதை இந்தப் பிரச்சினையில் மிகக்குறைந்தளவு தொடர்பு கொண்டவர்கள் கூடப் புரிந்துகொள்ள முடியும். இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் போன்று, இந்தியாவும் சர்வதேசமும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டமிட்டுக் கொண்டிருப்பது கூட மக்களை அழியவிட்டுக் கொண்டிருக்கும் அறியாமையே!

    ஜே.ஆரின் அரசாங்கத்தை மிரட்டி பேச்சு மேசைக்குக் கொண்டுவந்ததைப் போலவே புலிகளையும் கொண்டுவந்த இந்தியா, புலிகளைத் தொடர்ந்து பேச்சில் வைத்திருக்க முடியாத தோல்வியைக் கண்டது. இந்தியா தலையிட்டுச் செய்த சமாதான முயற்சி; சில மாதங்களுக்குள்ளாகவே முறிந்து, முரண்நகைப் போரை புலிகளுடன் செய்ய வேண்டியிருந்ததைத்தான் இந்தியா தனது அனுபவமாகக் கொண்டிருக்கிறது. நோர்வே, ஜப்பானாலும் புலிகளை போர்ச் சன்னத நிலையிலிருந்து மீள வைக்க முடியவில்லை. புலிகளைப் பேச்சுக்குப் பணிய வைப்பதே சிரமசாத்தியமானது என்பதுதான் இந்தியாவினதும் ஏனைய உலகநாடுகளினதும் பட்டனுபவமாக இருக்கும்போது, தமிழபிமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, முதலில் யாரிடம் தங்கள் கேள்விகளை வைக்க வேண்டுமென்பதையல்லவா?

    அதைவிடுத்து, ‘நம் பெடியளை யாராலும் வழிக்குக் கொண்டுவர முடியாது’ என்பதைத் தமிழ்வீரப் பெருமிதமாகத் தமக்குள் கொண்டிருப்பவர்கள், இந்தியாவை வழிக்குக் கொண்டுவரப் போடும் ஆர்ப்பாட்டத்திலுள்ள ‘லொஜிக்’கைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. புலிகளை வைத்துக்கொண்டு இலங்கைப் பிரச்சினையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்பதை உலகநாடுகள் விளங்கிக் கொண்டதன் வெளிப்பாடுதான் இலங்கை அரசின் இன்றைய யுத்த வெற்றி! இதைப் புரிந்துகொள்ள எவருக்கும் பெரிய சிந்தனையாற்றல் தேவையென்பதில்லை.

    புலிகளை, யாரும் அணுகமுடியாத சண்டைச் சர்வாதிகாரிகளாக வைத்துக்கொண்டு, உலக நாடுகளையெல்லாம் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய தமிழ்ப் பேதைமை!

  2. இப்போது முடங்கி விட்ட புலிகள் மீது இராணுவம்; தாக்கிக் கொண்டிருக்கிறது.
    தடுத்துவைக்கப்பட்ட மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு பல தடவை புலிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ஐ.நா உட்டபட சர்வதேச நாடுகள் மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற புலிகள் ஆயுதத்தைத் துறக்க வேண்டும் என்று கேட்டுள்ளன. இவை எதற்கும் புலிகள் கிறங்கவில்லை. மக்கள் இங்கிருந்து வெளியேற விரும்பவில்லை. மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மக்கள் இங்கிருக்கவே விரும்புகிறார்கள் என்று விடுதலைப்புலிகள் சொல்கிறார்கள். மக்கள் வேறு புலிகள் வேறு. இது மிகச் சாதாரணமான உண்மை. அனைவருக்கும் தெரிந்த உண்மை.
    வன்னி மக்களும் புலிகளும் மட்டுந்தான் ஒன்றா? அல்லது யாழ்பாணமக்களும் புலிகளா? கிழக்கு மக்களும் புலிகளா? அப்போது ஏன் கிழக்கிலிருந்து புலிகள் ஓடும் போது நீங்கள் கோசம் போடவில்லை? கிழக்கில் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியபோது கூக்குரலிடவில்லை. எங்கள் தமிழினம் தூங்குவதோ பாட்டுப் பாடவில்லை? அறிக்கை விடவில்லை? தீக்குளிக்கவில்லை? அப்போதெல்லாம் சும்மா பார்ர்த்துக் கொண்டு இருந்து விட்டு இப்பொழுது புலிகளது வாழ்கை பறிபோகும் தருணம் வந்தவுடன் மட்டும் விழித்துக் கொள்வதும் புலிகளும் மக்களும் ஒன்று என்பதும் போக்கிலித்தனம்.
    மிகவும் இலகுவான கேள்வி. புலிகள் வன்னியில் இருந்த பொழுது பாஸ் நடைமுறையை வைத்திராது இருந்தால் புலிகளதும் மக்களதும் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று சொல்வீர்களா? அந்த வன்னிமக்கள் இப்போது
    புலிகள் ஒருபோதும் மக்கள் சார்ந்து இருக்கவில்லை. மக்கள் சார்ந்து போராடவில்லை. அவர்கள் யுத்தம் செய்தார்கள். சில யுத்தத்தில் வென்றார்கள் அவர்கள் மக்களுக்காக போராடினார்கள் என்றால் கடந்த இரண்டு வருடமாக வன்னியில் எதற்காக பிள்ளை பிடித்தார்கள் என்று யோசிக்க வேண்டும்.? பிள்ளை பிடித்த விதம் யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? எத்தனை வன்னி இளைஞர்கள் பிடிக்க வரும் போது நஞ்சு குடித்தார்கள் என்று தெரியுமா? பிள்ளை பிடிக்கவிடாமல் சின்னவயதிலேயே கலியாணம் கட்டிவைத்த பெற்றோரைத் தெரியுமா? கலியாண வீட்டில் வைத்து மாப்பிளையைப் புலிகள் கூட்டிப்போன கதை யாருக்காவது தெரியுமா? முகாம்களில் உள்ளவர்கள் வெளியேறக் கூடாது என்று வைக்கப்பட்ட நிலையைக் கண்டிக்கும் அநேகர் புலிகள் வன்னியில் மக்களைக் கட்டாயத்தடுப்பில் வைத்திருக்கிறார்கள் தப்பியோடும் போது சுடுகிறார்கள் என்று தப்பி வந்த மக்கள் சொல்வதைக் கூட நம்ப மறுக்கும் ஏமாளிகளாக இருக்கிறார்கள் புலம் பெயர் மக்கள். திருகோணமலைக்குக் கொண்டுவந்த நோயாளிகள் அனைவரும் புலிகளால் கொடுக்கப்பட்ட பாஸ் வைத்திருந்தார்கள் என்ற செய்தி கூட இவர்களை எதுவும் செய்யவில்லை
    புலம் பெயர் மக்களும் புலிகளும் ஒன்று எனலாம். ஆனால் வன்னி மக்களும் புலிகளும் ஒருபோதும் ஒன்று அல்ல. கடந்த 10 வருடமாக இடம் கிடைத்த போதிலெல்லாம் மக்கள் வெளியேறிக் கொண்டுதானிருந்தார்கள். வெளியேற முடியாதவர்கள் வயது வித்தியாசமின்றி கட்டாய இராணுவப் பயிற்சி பெறவைக்கப்பட்டார்கள். இந்த இராணுவப் பயிற்சி என்பது மக்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள அல்ல. அவர்கள் புலிகளைக் காப்பாற்றவே. ஆக இந்தக் கட்டாய பிள்ளை பிடிப்பும் கட்டாயத் தடுப்பும் ஏன் உங்களுக்கு இன அழிப்பாகத் தெரியவில்லை? கடந்த இரண்டு வருடத்தில் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட எத்தனையோ இளம் சிறார்கள் தப்பி வரமுடியாத நிலையில் வெளிநாட்டிலுள்ள சகோதரங்களுக்கு தாம் இறந்து போக இருப்பதைச் சொல்லி அழுதிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் விடுதலைப் போராட்டத்தில் இவையெல்லாம் சகஜம் என்று நமக்குக் கதை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

Leave a Reply

Previous post குளவி கொட்டியதால் மாணவர்கள் ஆஸ்பத்திரியில்..
Next post மட்டு வவுணதீவில் ஆசிரியர் ஒருவர் சுட்டுக்கொலை