கரையாமுள்ளிவாய்க்காலை இராணுவத்தினர் கைப்பற்றியதாக அறிவிப்பு

Read Time:2 Minute, 6 Second

பாதுகாப்பு வலயத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கரையாமுள்ளிவாய்க்கால் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைத்திருந்த மண் அணையையும் மீட்டிருப்பதுடன், கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மோதல்கள் நிறுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதநேய உதவிகள் வழங்கப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் கோரிக்கைவிடுத்து, மறுதினமே பாதுகாப்பு வலயத்தில் மேலும் ஒருபகுதியைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதேவேளை, பாதுகாப்பு வலயத்துக்குள் உணவுப் பொருள்களை இலங்கை அரசாங்கம் அனுப்பாததால் அங்குள்ள மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டிருப்பதாக விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டு உண்மைதானா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு நேரடியாக இலங்கைக்கு வருமாறு ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று இலங்கை வருவதா என்பது பற்றி இதுவரை பான்கீ மூன் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லையென அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை நிலவரம் குறித்து பான்கீ மூன் ஜனாதிபதியுடன் மீண்டும் தொலைபேசியில் கலந்துரையாடல்
Next post குளவி கொட்டியதால் மாணவர்கள் ஆஸ்பத்திரியில்..