வன்னியில் இராணுவத்தினர் மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல்..

Read Time:1 Minute, 18 Second

வன்னியில் விடுதலைப்புலிகளிடம் எஞ்சியிருக்கும் பகுதியை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு எதிராக அதிகளவான தற்கொலை தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது விடுதலைப்புலிகளின் பகுதிகளை நோக்கி முன்னேறிச் செல்லும் படையினர் தற்கொலைத்தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர் எனத்தெரிவித்துள்ள இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார இதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் குறித்து கேட்டபோது அதனை தெரிவிக்கமறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதேவேளை தொடரும் மோதல்களில் படையினர் பாதுகாப்பு வலயத்துனுள்ள முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் மண்ணரணை கைப்பற்றியுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “வன்னியில் இராணுவத்தினர் மீது புலிகள் தற்கொலைத் தாக்குதல்..

  1. 1983ல் நடந்தது போல ஒரு நிகழ்வை நடத்துவதற்காக புலிகள் முடிந்த மட்டும் முயன்றனர். அது நடக்கவே இல்லை. அது இனி நடக்காது. மக்கள் விழித்து விட்டார்கள். அரசும் நன்றாக கற்றுத் தெளிந்து கொண்டது. புலிகள் பகுதியில் இருந்தவர்களும், புலம் பெயர்ந்தவர்களும் இன்னமும் கிணத்து தவளைகள். சில வட்டங்களை விட வெளியே வராதவர்கள். மாற்றத்தைக் கூட உணராதவர்கள். இதைத் தவிர மிகுதியாக இருப்பவர்கள் மாறி விட்டனர். புலிகளின் அழிவுக்கு பின்னர் தமிழருக்கு கேடு காலம் என எண்ணியோர் சிலர். அப்படி எதுவும் இல்லை என்பதே தற்போதைய நடைமுறை உண்மை. இந்த வெற்றிக் கழிப்புகளில் கூட வெசாக் போன்ற நிகழ்வுகளே ஆரவாரமில்லாமல் நடந்தது. புலிகளுக்கு 4 இராணுவம் செத்தாலே கொண்டாட்டம். புலிகளின் இறுதி முடிவுக்குப் பின்னரே, வடக்கே வசந்தமோ அல்லது வடக்கே வாழ்வோ நடைபெறும்.

  2. புலிகளின் ஏகபோக தமிழ் ஈழக் கனவு, இன்று ஒரு சிதைந்த கனவாக, மெய்ப்படாத கனவாக காலாவதியாகிப்போன கொள்கையாக பொய்யாய் பழங்கதையாய் வெறும் 3சதுர கிலோமீட்டர் பிரதேசத்தில் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது. புலிகளின் இறுதி முடிவுக்குப் பின்னரே, வடக்கே வசந்தமோ அல்லது வடக்கே வாழ்வோ நடைபெறும்.

Leave a Reply

Previous post புலிகளின் கடைசிக் காவல் அரணையும்; கைப்பற்றி விட்டதாகப் படையினர் அறிவிப்பு
Next post வானூர்தி ஒன்றும் உலங்குவானூர்தி ஒன்றும் புலிகளிடம் தற்போதும் உள்ளது -புலனாய்வுத்துறை தகவல்