இலங்கைக்கான ஐ.நாஇன் தூதுவராக பில் கிளின்டன் அல்லது கொபி அனானை நியமிக்குமாறு கோரிக்கை

Read Time:1 Minute, 39 Second

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவராக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் அல்லது முன்னாள் ஐக்கிய நாடுகளின் செயலாளர் கொபி அனானை நியமிக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான்கீமூனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அமெரிக்க தமிழர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நிலைமையை தெளிவாக ஆராய்ந்து தீர்வு யோசனையை முன்வைக்கக்கூடிய ஒருவரை விசேட தூதுவராக நியமிக்குமாறு கூறிய அமெரிக்க தமிழர்கள் அமைப்பு, இலங்கை மோதல்கள் குறித்து இலங்கைக்கு வெளியே நம்பகரமான தகவல்கள் சென்றடையவில்லையெனத் தோன்றுவதாகவும் குறிப்பிட்டது. ஊடகவியலாளர்கள், சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் மோதல்ப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதால், உலகை எட்டும் அறிக்கைகள் பக்கச்சார்பானதாகவே கிடைப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது. எனவே, விசேட தூதுவர் ஒருவரை நியமிப்பதன் மூலம் விடயங்களை சேகரித்து ஐக்கிய நாடுகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கமுடியுமெனவும் அமெரிக்க தமிழர்கள் அமைப்பு குறிப்பிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் தங்கியுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா) தலைவர்கள் விஜயம்!! (புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது.)
Next post பிரபாகரன் தப்பிக்க தயாராக இருந்த நீர்மூழ்கி : இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர்..