வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளின் 31 சடலங்கள் கண்டுபிடிப்பு.. முதல்தடவையாக பெருந்தொகையான ஆயுதமும் மீட்பு

Read Time:3 Minute, 54 Second

முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கொல்லப்பட்ட புலிகளின் 31 சடலங்களும் பெருந்தொகை ஆயுதங்களையும் படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். வெள்ளமுள்ளிவாய்க்காலில் படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் கடும் சமர் இடம்பெற்றுள்ளது. இம்மோதலில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் உயிரிழந்துள்ளனர். மோதல்களைத் தொடர்ந்து இராணுவத்தின் 58 ஆம் படையணியினர் அப்பகுதியில் தேடுதல் நடத்திய போது கொல்லப்பட்ட 31புலிகளது சடலங்கள் படையினருக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் பிரிகேடியர் கூறினார். சடலங்களுடன் 32-ரி 56 தோட்டாக்கள், 02, ஆர் பி. ஜி. ஆயுதங்கள், 04- எம். பி. எம். ஜீக்கள், 03- ஐ. கொம் தொலைத் தொடர்பு சாதனங்கள், 07- கிளேமோர் குண்டு, 03- ரி-56 ரவைகள், 02- டெட்டனேட்டர் கோட்கன் 01 ஆகியவையும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று முன்தினம் (09) 57 ஆம் படையணியினர் முல்லைத்தீவின் வெவ்வேறு பகுதிகளில் நடத்திய மோதலின் போது பெருந்தொகையான ஆயுதங்களும் வெடி பொருட்களும் படையினர் வசம் சிக்கியுள்ளன. இதுவரை காலம் மீட்கப்பட்டவற்றுள் இம்முறையே கூடுதலான ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

புதுக்குடியிருப்புக்கு மேற்கிலிருந்து, 03-82 மல்லிமீற்றர் மோட்டார்கள், 01- 60 மில்லி மீற்றர் மோட்டார், 03- எம். பி. எம்பி ஆயுதங்கள், 30- எல். எம். ஜி. கள், 231- ரி 56 ஆயுதங்கள், 58- 9 மில்லிமீற்றர் துப்பாக்கிகள், 100- எம். பி. எம். ஜி இணைப்புகள், 274- ஆர். பி. ஜி. குண்டுகள், 02 கிலோகிராம் நிறை கொண்ட 302 கிளேமோர் குண்டுகள், 130- வெடிக்க வைக்கும் மின்சார சாதனங்கள், 01- இரும்புக் கூடு, 140 மரக் கட்டைகள், 870- அமுக்க குண்டுப் பெட்டிகள், 12.7 மில்லிமீற்றர் 02- ஜி. பி. எம். ஜி. கள், 06- எல். எம். ஜி.கள், 06 ரி. 56 தோட்டாக்கள், 89- ரி 56 துப்பாக்கிகள், 01- விமானத் துப்பாக்கி, 02- எம். பி. எம். ஜி. குண்டுகள், 82 மில்லிமீற்றர் 367 மோட்டார் குண்டுகள், 1.5 கிலோகிராம் நிறைகொண்ட 30 கிளேமோர் குண்டுகள், 02- தற்கொலை அங்கிகள், 253 கிலோகிராம் – டி- என். டி. வெடி பொரு ட்கள், ஒரு படகு இயந்திரங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இதேபோல் புதுக்குடியிருப்பு கிழக்கு, பேரக்குளம், வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்தும் பெருந்தொகையிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக படையினர் குறிப்பிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் படைத்துறை பேச்சாளர் படுகாயம்? நேற்று செவ்வி கொடுத்தவர் இன்று படுகாயம்! நாளை பலி?
Next post கடற்புலிகளின் 2வது தலைவர் செலியன் மோதலில் மரணம்