யுத்தகுற்றத்தில் ஈடுபட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் -மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்

Read Time:1 Minute, 56 Second

இலங்கையின் வடக்கு பகுதியில் கொடூரமான யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை வழக்குத் தொடர வேண்டுமென முக்கிய இந்திய மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அப்பாவி பொதுமக்கள் நிலைகள் மீது இலங்கை அரசாங்கம் வான் மற்றும் ஆட்லறி தாக்குதல்களை நடத்தியமைக்காக அநேக சான்றுகள் இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் கடத்தல்கள் ஊடக அடக்குமுறை கப்பம்கோரல் உள்ளிட்ட பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்கள்களையும் இலங்கை அரசாங்கமும் அதன் ஆதரவு அமைப்புகளும் நாட்டில் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக சிவில் உரிமைகளுக்கான மக்கள் கழகம் தெரிவித்தள்ளது வன்னியில் பல்வேறு துயரங்களை எதிர்நோக்கி வரும் தமிழ் பொதுமக்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒருவாரகாலத்தின் பின் மட்டக்களப்பில் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின..
Next post இலங்கை குறித்து ஜப்பான் முக்கிய பங்குவகிக்க வேண்டும் -சர்வதேச அமைப்புக்கள் வேண்டுகோள்