பத்திரிகையாளர் வெளியேற்றம் பிரிட்டன் அரசு கடும் கண்டனம்

Read Time:2 Minute, 11 Second

இலங்கையிலிருந்து மூன்று பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பிரிட்டன் அரசு இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முகாம்களிலுள்ள தமிழர்கள் மிகமோசமாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து செய்தி வெளியிட்டமைக்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தில் தொலைக்காட்சி செய்திக்குழுவொன்றை நாட்டைவிட்டு வெளியேற்றியிருப்பதற்கு கடும் ஏமாற்றமும் அடைந்திருப்பதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது. சனல் 4 நிறுபர் நிக்பற்றன் வோல்ஸ் தயாரிப்பாளர் பெஸ்ஸீடு புகைப்படப்பிடிப்பாளர் மட்ஜாஸ்பர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு இலங்கையை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டதாக ஐ.ரி.என் செய்திச்சேவை தெரிவித்திருந்தது ஐ.ரி.என். சனல்4 செய்திகளை சனிக்கிழமை வெளியிட்டிருந்தது செய்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியேறியுள்ளனர். அதிகளவு வெளிப்படைத்தன்மை என்ற விடயத்தில் இந்தத் தீர்மானம் மிகவும் ஏமாற்றமளிப்பதாகும் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருக்கிறது. பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் உணவு நீர் தட்டுப்பாடு என்பவற்றை உள்ளடக்கிய குற்றச்சாட்டுகள் வவுனியா முகாமில் காணப்படுவதாக மே5ல் படம் எடுக்கப்பட்டதற்கு இலங்கை அரசு ஆட்சேபனை தெரிவித்திருந்தது இக்குற்றச்சாட்டுகள் யாவற்றையும் இலங்கை அரசு மறுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் யோசனைகளை தீர்;மானங்களை ஏற்கப் போவதில்லை இலங்கை அரசு அறிவிப்பு
Next post புலிகளின் விமானப் பாகங்கள் மீட்பு