சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள புலிகள் முயற்சி -இராணுவப் பேச்சாளர்

Read Time:2 Minute, 9 Second

சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி இறுதிக் கட்டத்திலாவது தங்களை பாதுகாத்துக் கொள்ள புலிகள் முயற்சிப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பயணமாக வைத்துள்ள பொதுமக்கள் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதுல் நடத்தும் புலிகள் பின்னர் அது தொடர்பான பொய்யான தகவல்களை வெளியிட்டு படையினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். புலிகள் சர்வதேச ஊடகங்களை பயன்படுத்தி பொய்யான தகவல்களை வெளியிட்டு தமக்கு எதிரான படைநடவடிக்கைகளை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்ற பொதிலும் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட மாட்டாதென்றும் பொதுமக்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களை இலக்குவைத்து புலிகள் தொடர்ந்தும் கனரக தாக்குதல்களையும் மோட்டார் தாக்குதுல்களையம் மேற்கொண்டு வருவதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார். புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு எந்வித பாதிப்பும் இழப்புமின்றி ஏற்படாத வகையில் படையினர் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னேறிவருவதுடன் பொதுமக்களையும் பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாய்க்கால் பிரதேசத்துக்குள் படையினர்: புலிகளின் 25 சடலங்கள் ஆயுதங்கள் மீட்பு
Next post இலங்கை நிலைமைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கவலை: தாமதிக்கவும் இனி நேரமில்லை