55 அடி நீளமான புலிகளின் பாரிய தற்கொலை படகு மீட்பு

Read Time:1 Minute, 42 Second

வெள்ளைமுள்ளிவாய்க்கல் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 55 அடி நீளமான புலிகளின் பாரிய தற்கொலை படகு ஒன்றை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாண யக்கார தெரிவித்தார். இந்தப் படகில் 1500 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பொருத்தப் பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். கடற்கரை பிரதேசத்தின் ஊடாக நேற்று நண்பகல் வேகமாக முன்னேறிச் சென்ற இராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குண ரட்ன தலைமையிலான படையினர் இதனை கண்டெடுத்துள்ளனர். இந்தத் தற்கொலை படகு முழுவதிலும் கிளேமோர் குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. இரு தரப்பினருக்கும் இடையிலான கடும் மோதல்கள் இடம்பெறும் போது திடீரென அந்தப் படகை வெளியில் எடுத்து வெடிக்க வைக்கும் நோக்குடனேயே புலிகள் தயார் நிலையில் இதனை வைத்திருந்துள்ளனர். வெளியில் தெரியாதவாறு இது மிகவும் சூட்சுமமாக பற்றைக்குள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததாகவும் பிரிகே டியர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரிஸ் நகரின் ‘லாபோர்ஜ்’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் பெளத்த மத்திய நிலையம் தாக்கப்பட்டது; இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு போகொல்லாகம வேண்டுகோள்
Next post பாதுகாப்பு செயலரை இலக்கு வைத்த தாக்குதல் முயற்சி; பிரதான சந்தேக நபர் “கிளி” வவுனியாவில் கைது