ஒரே தடவையில் 200 புலிகள் இராணுவத்திடம் சரண்!

Read Time:7 Minute, 4 Second

யுத்த நடவடிக்கைகள் அற்ற பொதுமக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியும் அதனை அண்டிய பிரதேசமும் அடங்கிய சுமார் மூன்று சதுர கிலோமீற்றறுக்குள் உட்பட்ட குறுகிய பிரதேசங்களில் பாதுங்கியிருக்கும் புலிகள் இயக்கத்தலைவர்மார்களும் இயக்கத்தினரும் அங்கிருந்து மக்கள் தப்பியோடுவதைத் தடுக்கப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றபோதும் அப்பகுதிகளிலிருந்து மக்கள் இரகசியமாகப் பெரும் எண்ணிக்கையில் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தப்பியோடும் மக்களுடன் மக்களாகச் சேர்ந்து புலிகள் இயக்க உறுப்பினர்களும் தங்கள் குடும்பத்தினருடன் வெளியேறிக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு படைத்தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு பொதுமக்களுடன் சேர்ந்து இரகசியமாகத் தப்பியோடி வந்து அரச இராணுவத்தினரிடம் அடைக்கலம் புகுந்துள்ள மக்களிடையே இருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் அண்மைக்காலங்களில் தமது இயக்கத்தொடர்பு பற்றி இராணுவத் தளபதிகளுக்குத் தெரிவித்து அவர்களிடம் சரணடைந்துள்ளனர். மேலும் இவ்வாறு அவர்களின் குடும்பத்தினரும் தம்மை பற்றிய உண்மையான விபரங்களை இராணுவத்தினரிடம் தெரிவித்து அடைக்கலம் புகுந்துள்ளனர். முன்னைய அறிக்கைகளுக்கேற்ப இதுவரை 400 க்கும் மேற்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மக்களுடன் சேர்ந்து வந்தும் தனியாக வந்தும் அரசபடையினரிடம் சரணடைந்துள்ளதாக அண்மையில் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களுக்கேற்ப இவ்வாறு இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு புலிகள் இயக்கத்தினர் தப்பியோடி வந்து இராணுவ முகாம்களிலோ அல்லது அப்பகுதிகளில் செயற்படும் இராணுவ படையணியினரிடமோ சரணடையும் சம்பவங்கள் புலிகள் தமது பலக்கோட்டையாக இறுதிவரை பாதுகாத்து வந்த புதுக்குடியிருப்பு பிரதேசத்தை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னரே அதிகரித்து வந்துள்ளன. இந்த வகையில் அண்மையில் புலிகள் இயக்கப் பகுதிகளிலிருந்து தப்பி வந்து வவுனியாவில் செட்டிகுளம் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டவர்களில் சுமார் 200 பேர் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களுடன் சேர்ந்து தப்பிவந்துள்ள தமது உறவினர்களுடனேயே அங்கிருந்து தப்பி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்தப்புலிகள் இயக்கத்தினர் மக்களுடன் தப்பிவந்த வேளையில் தம்மைப் புலிகள் இயக்கத்தினர் என முதலில் இராணுவத்தினருக்கு அறிவிக்கவில்லை. செட்டிகுளத்தில் இடம்பெயர்ந்தவர்கள் அங்கிருக்கும் அகதிமுகாம் பகுதிகளுக்கு வந்த பின்னரே இவர்கள் தாமாகவே முன்வந்து தம்மைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என இராணுவ அதிகாரிகளுக்குத் தெரிவித்துச் சரணடைந்துள்ளனர். அத்துடன் தப்பிவந்த தமது உறவினர்கள் பற்றியும் அவர்கள் தாமாகவே தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து குறித்த சுமார் 200 புலிகள் இயக்கத்தினரின் உறவினர்களும் தாமாகவே இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர்.

இது பற்றி பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் புலிகள் இயக்கத்தினர் சரணடைந்திருப்பது இதுவே முதற்தடவை எனவும் மேலும் இவர்கள் தமது உறவினர்களுடன் சரணடைந்திடும் விசேடமான சம்பவம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சரணடைந்துள்ள புலிகள் இயக்கத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இராணுவத்தினர் பொதுமக்களைப் புலிகள் இயக்கத்தினரிடமிருந்து மீட்பதற்காகத் தற்போது மேற்கொண்டுவரும் தீவிர நடவடிக்கைகளிலிருந்து புலிகள் இயக்கத்தினர் உயிர்தப்ப முடியாது எனவும் எவ்வாறாயினும் புலிகள் இயக்கத் தலைவர்கள் இயக்க உறுப்பினர்களையும் மக்களையும் தமது பாதுகாப்புக்காகப் பலாத்காரமாகத் தடுத்து வைத்திருப்பதாகவும் புலிகள் இயக்க உறுப்பினர்களும் மக்களைப்போலவே தலைவர்களிடமிருந்து தப்பியோடுவதற்கான தருணத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் இந்த வகையில் தப்பியோடா விட்டால் இராணுவத் தாக்குதல்களில் தாம் கொல்லப்படப் போவதை அவர்கள் அறிவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இரகசியமாக புலிகள் இயக்கத் தலைவர்களிடமிருந்து தாம் தப்பி வந்து தமது உறவினர்களையும் கூட்டிக்கொண்டு ஏனைய மக்களுடன் சேர்ந்து வந்ததாக மேலும் மேற்படி சுமார் 200 புலிகள் இயக்க உறுப்பினர்களும் கூறியுள்ளனர்.

இவ்வாறு தப்பிவந்தவர்கள் புலிகள் இயக்கத்தினராக இருந்தபோதும் விசாரணைகளின் பின்னர் அவர்களின் உறவினர்களுடன் புனர்வாழ்வு முகாம்களுக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்படுவர் என வவுனியாப் பிரதேச பாதுகாப்புப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “ஒரே தடவையில் 200 புலிகள் இராணுவத்திடம் சரண்!

  1. பிரபா கூட்டம் தேடித்திரிந்து பிடித்தாலும் இத்தனை பேரைப் பிடிக்கமுடியாது!
    இலங்கை அரசை நம்பி இத்தனைபேர் வருகிறார்கள் என்பது விசித்திரம்தான்!
    இதுக்குப் பிறகும் பிரபா கழுத்திலை சும்மாவா குப்பி கிடக்கிறது?

Leave a Reply

Previous post நலன்புரி நிலையங்களில் உதவி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்,.. அரசாங்க ஊழியர்கள்
Next post பான் கி மூன் தூதராக விஜய் நம்பியார் மீண்டும் கொழும்பு செல்கிறார்