பாதுகாப்பு வளையப் பகுதியில் கடும் போர் – பெரும் உயிரிழப்பு அபாயம்!

Read Time:3 Minute, 38 Second

விடுதலைப் புலிகள் வசம் உள்ள மிகக் குறுகிய பகுதியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் இறுதிக் கட்ட தாக்குதலில் இறங்கியுள்ளது. பல முனைகளிலிருந்து, கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ள பாதுகாப்பு வளையப் பகுதியில் தாக்குதல் நடந்து வருகிறது. இதனால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இன்னும் 48 மணி நேரத்தி்ல விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுவார்கள் என இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளதால், தமிழர்கள் உள்ள பகுதியை ஒட்டுமொத்தமாக இலங்கை ராணுவம் தாக்கி அழிக்க முயலுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதிகாலை முதல் பாதுகாப்பு வளையப் பகுதி முழுவதிலும் இருந்து கரும்புகை வெளிவந்த வண்ணம் உள்ளது. பாதுகாப்பு வளையப் பகுதியை நோக்கி தொடர்ந்து இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மிகக் குறுகிய கடற்பரப்பான பாதுகாப்பு வளையப் பகுதியை ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் இந்தப் பகுதியை கைப்பற்றும் முடிவில் ராணுவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வந்த ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனையும் தற்போது சேதமடைந்து, செயலிழந்து கிடக்கிறது. எனவே காயமடைந்தோருக்கு தற்போது சிகிச்சைக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டன.
48 மணி நேரத்தில் புலிகள் அழிக்கப்படுவர் ..
இதற்கிடையே, இலங்கை அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விடுதலைப் புலிகளை இன்னும் 48 மணி நேரத்திற்குள் அழித்து விட வேண்டும் என அதிபர் ராஜபக்சே உறுதி பூண்டுள்ளார். அதற்கேற்ப ராணுவம் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புலிகள் வசம் உள்ள அனைத்து அப்பாவி மக்களும் மீட்கப்பட்டு விடுவார்கள். விடுதலைப் புலிகள் வசம் உள்ள அனைத்துப் பகுதிகளும் மீட்கப்படும் எனவும் அதிபர் உறுதியுடன் உள்ளார் என்றார். நேற்று இரவே விடுதலைப் புலிகள் தற்போது முடக்கப்பட்டுள்ள 1.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியைச் சுற்றிலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை இலங்கை ராணுவம் குவித்து விட்டது. புலிகள் வசம் தற்போது 1500 வீரர்கள் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்னும் இப்பகுதியில் தான் இருக்கிறாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

5 thoughts on “பாதுகாப்பு வளையப் பகுதியில் கடும் போர் – பெரும் உயிரிழப்பு அபாயம்!

  1. இனவாதம், மொழிவாதம் என்றெல்லம் பேசுகிற புலிப் பினாமிகளே…..

    பிரதேசவாதம் இல்லாமலோ, மாத்தையா, கருணா, இப்ப ILANTHIRAIYAN…..????

    மாத்தையாவின்ர பிரச்சினைக்குப் பிறகு, எத்தனை போராளிகள்,

    பயிற்சியின் போது வீரமரணம்,

    முன்னரங்கில் வீரமரணம்,

    விபத்தில் வீரமரணம்,

    இன்றுவரை உடலமே எடுக்காதநிலையில் வீரமரணம்……..

    அதுமட்டுமோ……இன்றுவரை உயிருடன் இருக்கிறாரோ இல்லையோ என்று தெரியாத முகங்கள் எத்தனை?

    சுனா பானாவுக்கும் இதே கதி தான்….கன காலம் டம்மிங், பிறகு சன் ரீவிக்கு ஒரு பேட்டி….பிறகு, சரியா அவருக்கு மேல விழுந்த குண்டு…அந்த நேரத்தில வெடிச் சத்தம் வேற கேட்டதாம் அங்க…ம்ம்ம்ம்…..

    பால்ராஜ்,,,
    நல்ல ஒருபடை வீரன் காட் அற்றாக் வந்து வீர மரணமாம்….

    இப்பிடி எத்தனை பேர் அவன்ர ஏரியாவிலேயே, கிளேமோர் வெடிச்சு இறந்தவை???

    ம்ம்ம் இதென்ன புலிகளுக்குப் புதிதோ…எத்தனை அப்பாவி மக்களைக் கடத்தி,

    எத்தனை தாய்மார்,
    “எனது பிள்ளை ஒரு பாவமும் செய்யவில்லை, எங்கோ எப்படியோ உயிரோடுதான் இருப்பான், இன்று வருவான், நாளை வருவான்…………”, என்று…….

    எத்தனை மனைவியர்,
    தத்தமது கணவன் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் இன்றுவரை பூவும் பொட்டும் சுமந்து வாழும் நிலையில்…….

    எத்தனை பிள்ளைகள்………..

    “அப்பா”

    என்ற ஒரு சொல்லுக்காய் ஏங்கி………..ஏங்கி……

    எத்தனை வருடமாக ஏக்கமே வாழ்க்கையாக வாழவேண்டிய நிப்பந்தத்துக்கு ஆளாக்கிய மிகப் பெரும் பெருமைக்கு உரிய புலிகளுக்கு கோயில் கட்டும் மக்களே………

    தயவு செய்து….இனியாவது புலி ஒழிந்து….எமக்கெல்லாம் விடிவு வர உதவுங்கள்……

    PLEASE SAFE OUR PEOPLE……NOT LTTE LEADERS……………..

  2. சிங்களவன் என்னடா எண்டா 48 மணித்தியாலத்தில புலிகளை அழிப்பானாம் ..
    இங்க தமிழ் பேப்பரில ஹெட் நியூஸ் . 2010 இல தலைவர் தமிழ் ஈழம் பிரகனப்படுத்துவாராம்…
    நடுவில சனம் சாவது தான் மிச்சம்….
    என்ன நம்பிக்கையோ…… இழப்புகள் இல்லாமல் அப்படி நடந்தால் சந்தோசம் தான்….

  3. இரண்டு கேணல்களும் 6 பிராந்திய தளபதிகளும் அரசபடைகளால் பிடிக்கப்பட்டதோடு புலிகளின் கப்பல்களின் உரிமையாளர், பாடகர் சாந்தன் உட்பட பலர் இராணுவத்திடம் பிடிபட்டதாகவும் பிரபாகரனின் கதையை ராஜபக்சே ஜோடானில் இருந்து திரும்பியவுடன் மக்களுக்கு அறிவிக்க இருப்பதாகவும் இங்குள்ள இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
    தம்பையா சபாரட்ணம்
    நாலாம் கட்டை
    அளம்பில் முல்லைத்தீவு

  4. நேற்று மதிவதனி பாலச்சந்திரன் உட்பட முக்கிய புலிகளின் குடும்பத்தவர் போலி அடையாள அட்டைகளுடன் இராணுவத்திடம் சரண் அடைந்து விட்டபோதும் இன்று இராணுவத்தினர் அவர்களை அடையாளம் கண்டு விட்டனர். ஞாயிறு காலை ராஜபக்சே பிரபாகரன் பிணமான செய்தியை தெரிவிக்க இருப்பதாக இங்கே சொல்லப்படுகிறது.
    இந்திய தீர்வை இருபது வருடத்திற்கு முன்னர் ஏற்றிருந்தால் முப்பதாயிரம் புலிகள் மாவீரர்கள் என்று மாய்ந்திருக்க வேண்டியதில்லை. கிளிநொச்சி பிடிபட்டதோடு யுத்த நிறுத்தம் அறிவித்திருந்தால் வன்னி மக்கள் இவ்வளவு இழப்புகளையும் அவலங்களையும் சந்ததித்திருக்க வேண்டி வந்திருக்காது.
    அரசியல் சூனியங்களை அறிவு கெட்ட முழு முட்டாள்களை புளுகு புளுகு என்று புளுகி இந்தா பண்ணப் போகிறான் படைக்கப் போகிறான் என்று பிலிம் காட்டி கடைசியில் கண்டது என்ன
    பங்கருக்குள் பாவாடையோடு படுத்துகிடந்த பேடி பிணமானதும் இன்னமும் புலி வாலுகள் அகபட்டதை சுருட்டி கொண்ட பின்னர் அரசாங்கம் அறிவித்த பின் தாமும் பிரபா பிணமானதை அறிவிக்க உள்ளார்கள்.
    இனியாவது அரசியல் பிழைப்பு நடத்தும் நரியர்களை நம்பாது ஒன்றுபட்டு முன்னேறுவோம்.

  5. புலிகளோ யுத்தம் இல்லாத போது மக்கள் சலிப்படைந்து போவார்கள் என்றும் போராளிகள் மன மாற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அடுத்த இயக்கத்தவரையாவது போட்டுத் தள்ளுவதில் ஊக்கம் கொடுத்து. அந்த போர் மூடில் போராளிகளை வைத்திருக்க முயன்றார்கள்.சொறிந்தவன் கை சும்மா இருக்காது என்பது போல போரையும் வலிந்து தொடுத்தனர்.
    புலிகளது ஆயுதத்துக்கு பயந்தே புலி வாலை விட முடியாமல் அநேகர் இருந்தனர்அவர்கள் 30 வருடத்தில் பட்ட துன்பம் ஏராளம். ஆனால் அதுக்கு அவர்களுக்கு பட்டதோஅல்லது கிடைத்த நின்மதியோ ஒரு துளி கூட கிடையாது. ஆயுதம் மக்களின் உனர்வுகளையும் உரிமைகளையும் அடக்கியதே தவிர, அதை மக்களுக்கு எதுவும் பெற்று தரவில்லை. இறுதி நேரத்தில் கூட மக்களில் எந்தவித அக்கறையும் இல்லாமல் ஆயுதத்தை காப்பாற்றவே புலிகளின் வியாபாரிகள் உலகம் முளுவதும் ஓலமிட்டனர்.
    யுத்தத்தின் பின் சமாதானம் இப்படியும் வரும்? அமெரிக்க ஜப்பான் போரின் பின்னும் , ஜெர்மன் ஐரோப்பிய போரின் பின்னும் சமாதானம் வந்தது. அங்கே வாழும் மக்கள் வெறுத்து விட்டால் அடுத்தவரால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று ஜேவீபீ மற்றொரு புரட்சிக்குத் தயாரில்லை. இலங்கை வாழ் தமிழரும் இன்னொரு இழப்புக்கு தயாரில்லை.

    பிற்குறிப்பு
    முன்னாள் பிஸ்டல்குழு தலவன் தமிழ்செல்வனின் மனைவி கூட தன புதிய காதலனுடன் புது வாழ்வு அமைக்க ராணுவத்திடம் சரண் அடைந்து விட்டார்.

Leave a Reply

Previous post பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் பலர் இடம்பெயர்வு
Next post மிகவும் மோசமான நிலையிலிருக்கும் இடம்பெயர்ந்து வரும் மக்கள்!!