திமுக வெற்றி முகம்-அதிமுகவுக்குப் பின்னடைவு: வாக்கைப் பிரித்தது தேமுதிக

Read Time:5 Minute, 40 Second

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 27 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள 13 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னணி பெற்றுள்ளது. அதிமுகவின் வாக்குகளை பெருமளவில் தேமுதிக பறித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடக்கம் முதலே திமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலை பெற்று வந்ததால், யாருக்கு எந்த சீட் கிடைக்கும் என்பது உறுதியாகத் தெரியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் முற்பகல் 11 மணிக்கு மேல் திமுக கூட்டணிக்கு பெரும்பாலான இடங்களில் உறுதியான முன்னிலையைப் பெற்றுள்ளது. தற்போது திமுக கூட்டணி 27 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 16 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இக்கட்சி 21 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இக்கட்சி 15 இடங்களில் போட்டியிட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான் போட்டியிட்ட இரு இடங்களிலும் முன்னணியில் உள்ளது. திமுக கூட்டணியிலேயே அதிக அளவிலான வாக்குகள் முன்னிலையில் இருப்பது மதுரையில் போட்டியிட்ட மு.க.அழகிரிதான். அவர் ஒரு லட்சம் வாக்குகளையும் தாண்டி முன்னிலையில் உள்ளார்.

சிதம்பரம்-இளங்கோவன் ஐயருக்கு பின்னடைவு…

காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் கடும் அடி கிடைத்துள்ளது. முக்கிய வேட்பாளர்களான ப.சிதம்பரம், மணிசங்கர அய்யர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

திமுகவைப் பொறுத்தவரை தயாநிதி மாறன், ஏ.கே.எஸ்.விஜயன், டி.கே.எஸ். இளங்கோவன், டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னில வகிக்கின்றனர்.

அதிமுக கூட்டணி 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் அதிமுக 10, சிபிஐ, சிபிஎம் தலா ஒரு தொகுதி, மதிமுக ஒரு தொகுதியில் முன்னணியில் உள்ளன.

பாமகவுக்கு அனைதிலும் தோல்வி…

பாமக போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் பி்ன்தங்கியுள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட்ட கரூர் தம்பித்துரை, நெல்லை அண்ணாமலை, மயிலாடுதுறை ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் முன்னணியில் உள்ள முக்கிய வேட்பாளர்கள்.

சிபிஐ தென்காசியில் மட்டும் முன்னணியில் உள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வட சென்னையில் பின்தங்கி உள்ளார்.

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் உள்ளது.

வைகோவுக்கும் பின்னடைவு…

ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி முன்னணியில் உள்ளார். ஆனால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, விருதுநகரில் 5000க்கும் மேற்பட்ட வாக்குகளில் பின் தங்கிக் காணப்படுகிறார்.

திமுக எதிர்ப்பு வாக்கை பிரித்த தேமுதிக…

தேமுதிகவைப் பொறுத்தவரை அனைத்துத் தொகுதிகளிலும் அது பின் தங்கிக் காணப்படுகிறது. இருப்பினும் இந்தக் கட்சியின் வேட்பாளர்கள் அதிமுக கூட்டணியின் வாக்குகளை பெருமளவில் பிரித்து விட்டதால் அதிமுக கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.

திமுக கூட்டணிக்கு பெருவாரியான தொகுதிகளில் வெல்லும் நிலை காணப்பட்டாலும் கூட கடந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் வென்றதால், இந்த வெற்றி திமுக கூட்டணிக்கு முழுமையானதாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், கடந்த முறை ஒரு சீட் கூட வாங்காத அதிமுக இந்த முறை பத்து தொகுதிகளில் வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியைப் பொறுத்தவரை காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி பெருவாரியான வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார். இந்தத் தொகுதியை பாமகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து கோரி வழக்கு
Next post இராணுவத்தினரால் பிரபாகரன் சுற்றி வளைப்பு: கரையோரப் பகுதி முற்றாக விடுவிப்பு