தமிழர் அகதி முகாம்கள் அருமை!-பாராட்டும் விஜய் நம்பியார்

Read Time:2 Minute, 12 Second

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் சிறப்புப் பிரதிநிதியாக கொழும்பு வந்துள்ள விஜய் நம்பியார், இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக இலங்கை அரசு அமைத்துக கொடுத்துள்ள முகாம்களில் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பாராட்டித் தள்ளியுள்ளார். போர் முனையில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காக பான் கி மூனால் சில நாட்களுக்கு முன்பு கொழும்புக்கு அனுப்பப்பட்டிருந்தார் விஜய் நம்பியார். ஆனால் இவர் வந்து சேருவதற்குள்ளாகவே (நியூயார்க்கிலிருந்து நேராக கொழும்புக்கு வராமல் இடையி்ல் டெல்லி சென்று விட்டு கொழும்புக்கு வந்தார் விஜய் நம்பியார்) வன்னிப் பகுதியில் அனைத்தையும் முடித்து விட்டது இலங்கை ராணுவம். இந்நிலையில், மாணிக் பார்ம் பகுதியில் உள்ள இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களை விஜய் நம்பியார் பார்வையிட்டார். அப்போது இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நல்வாழ்வு நடவடிக்கைகள், பிற திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாராம். அப்போது முகாம்களில் சிறப்பான வசதிகள் செய்யப் பட்டிருப்பதாக பாராட்டு தெரிவித்தாராம் விஜய் நம்பியார். விஜய் நம்பியாரின் சகோதரர்தான் சதீஷ் நம்பியார். இவர் ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை சென்ற இந்திய அமைதி காக்கும் படையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்பது நினைவுகூறத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “தமிழர் அகதி முகாம்கள் அருமை!-பாராட்டும் விஜய் நம்பியார்

  1. For your information what happens inside the camps everyone knows including foreign medias.dot write jokes my dear publisher

  2. theo, unkalal thamilan nimmadiya erupphthai jeeranikkamudiyavillaya ,thirumpavum praba vin narakathukku annuppa veenduma

Leave a Reply

Previous post பிரபாகரனின் மரணத்தில் “நக்கீரன்” பத்திரிகை செய்திருக்கும் மிகப்பெரிய புகைப்பட மோசடி!!!
Next post சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் தாக்கல் செய்த உரிமை மீறல் வழக்கு வாபஸ்