கூட்டமைப்பினர் புதுடில்லி பயணம்

Read Time:2 Minute, 12 Second

இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வு காணப்படவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் புதுடில்லி செல்லவுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைச் சந்தித்ததைத் தொடர்ந்தே கூட்டமைப்பு புதுடில்லி சென்று இந்திய அரசியல் தலைமையைச் சந்திக்கத் திட்டமிட்டது. இலங்கை வந்த இந்தியாவின் விசேட தூதுவர்களைச் சந்தித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் 13வது திருத்தம் இதுவரை அமுல்படுத்தப்படாத நிலையில் அதற்கு அமையத் தீர்வொன்றை முன்வைப்பதில் காணப்படும் நிலை குறித்து விளக்கமளித்துள்ளனர். இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்பதே 13வது திருத்தத்தின் முக்கிய பகுதியென்பதைக் கூட்டமைப்பினர் இந்தியத் தூதுவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்ததுடன், மத்திய அரசாங்கத்திடம் காணப்படும் பெரும்பாலான அதிகாரங்கள் இதுவரை மாகாணசபைகளுக்கு பகிரப்படாமையையும் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த விடயம் குறித்து புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரெனவும் இந்தியத் தூதுவர்கள் உறுதிமொழி வழங்கிச் சென்றுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “கூட்டமைப்பினர் புதுடில்லி பயணம்

Leave a Reply

Previous post மனிதநேயப் பணியாளர்கள் முகாம்களுக்குள் நுழைய தடையில்லை: விஜே நம்பியார்
Next post “தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்பார்கள்.. அது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.. -புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன்