பத்மநாதன் எம்.பிக்கு அவரது பிறந்த ஊரில் மக்கள் அஞ்சலி.. தம்பிலுவிலில் இன்று இறுதிக்கிரியை

Read Time:1 Minute, 36 Second

காலஞ்சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் கனகசபை பத்மநாதனின் பூதவுடல் நேற்று மக்கள் அஞ்சலிக்காக அவரது பிறந்த ஊரான காரைதீவில் வைக்கப்பட்டிருந்தது. அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், மற்றும் சமயத் தலைவர்கள், மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பணியாற்றும் திணைக்களத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் வருகை தந்து தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர். இதேவேளை காரைதீவில் இயங்கும் பல்வேறு சேமநல அமையங்கள் கண்ணீர் அஞ்சலி பதாதைகளை தொங்கவிட்டும், வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்டும், பிரசுரங்களை வெளியிட்டும் கண்ணீர் மல்க தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர். அன்னாரின் பூதவுடல் காரைதீவில் மக்கள் அஞ்சலி மற்றும் அஞ்சலிக் கூட்டம் என்பன இடம்பெற்ற பின்னர், அவரது புகுந்தவூரான தம்பிலுவில்லுக்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று இடம்பெறும் இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து, தகனம் செய்யப்படவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Prabhakaran got it all wrong in his last interview! -EXCLUSIVE
Next post பிரபாகரனின் உடல் தகனம் செய்யப்பட்டு அஸ்தி இந்து சமுத்திரத்தில் எறியப்பட்டது .இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக