சரணடைய இடைத்தரகராக செயற்படுமாறு புலிகள் என்னை மன்றாட்டமாக கேட்டிருந்தனர் -லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நிருபர் மேரி கொல்வின் கூறுகிறார்..

Read Time:19 Minute, 3 Second

ltteleadersteசரணடைவதற்கு இடைத்தரகராக செயற்படுமாறு புலிகள் என்னிடம் மன்றாடிக் கேட்டனர். இது நம்பிக்கையிழந்த கடைசி தொலைபேசி அழைப்பாக இருந்தது. ஆனால், சில மணித்தியாலங்களுக்குள் மரணமடையப்போகின்ற மனிதனின் குரலோசையாக அது காணப்படவில்லை. புலிகளின் அரசியல் தலைவரான பா.நடேசன் திரும்பி வருவதற்கு எந்தவொரு மாற்றமும் இல்லை. “நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் கடைசியாக அவர் எனக்குக் கூறினார். விடுதலைப் புலிகள் கடைசியாக தமது களமாக அமைத்துக்கொண்ட இலங்கையின் வட பகுதியிலுள்ள கடற்கரையோரம் அமைந்த சிறு நிலப்பகுதியிலிருந்து செய்மதித் தொலைபேசி மூலம் இதனை அவர் எனக்குத் தெரிவித்திருந்தார். அங்கிருந்து இயந்திரத் துப்பாக்கிகளின் ஓசையை என்னால் கேட்கக்கூடியதாக இருந்தது. அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்; “ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்று கூறியிருந்தார். வெற்றி பெற்றிருக்கும் இலங்கை இராணுவத்திடம் சரணடைவது 26 வருட உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விடயம் தொடர்பாக லண்டன் டைம்ஸ் பத்திரிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் எழுதியிருப்பதாவது; 8 வருடங்களுக்கு முன்பு புலிகளின் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதிலிருந்து நடேசனையும் புலிகளின் சமாதானத் செயலகத் தலைவர் சீவரட்ணம் புலித்தேவனையும் நான் அறிந்திருந்தேன். அந்த காலகட்டத்தில் தீவின் மூன்றில் ஒரு பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். இப்போது இந்த இருவரும் எஞ்சியிருக்கும் 300 போராளிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பலர் காயமடைந்திருந்தனர். அவர்களுடன் பல்லாயிரணக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களும் அகப்பட்டிருந்தனர். கையால் கிண்டிய பதுங்கு குழிகளுக்குள் மறைந்திருந்தனர். தொடர்ச்சியான குண்டு வீச்சுகள் அருகாமையில் நீடித்திருந்தன. புலிகளின் கிளர்ச்சியை இராணுவம் வெற்றிகரமான முறையில் முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் போது பல நாட்களாக புலிகளின் தலைமைத்துவத்துக்கும் ஐ.நா. விற்கும் இடையில் நான் இடைத்தரகராக இருந்தேன். மூன்று விடயங்களை ஐ.நா. விற்குத் தெரிவிக்குமாறு நடேசன் என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை அவர்கள் விரும்புகின்றனர். தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டுமென்ற உறுதிமொழியை அவர்கள் விரும்பியிருந்தனர். பிரிட்டிஷ், அமெரிக்காவைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளூடாக கொழும்பில் இருந்து ஐ.நா. வின் விசேட தூதுவர் விஜே நம்பியாருடன் நான் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். அவர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதம தலைமையதிகாரியாவார். சரணடைவதற்கு புலிகளின் நிபந்தனைகளை நான் அவருக்குத் தெரிவித்திருந்தேன். அவற்றை இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிப்பதாக அவர் கூறியிருந்தார். சமாதானமான பெறுபேற்றை மோதலானது கொண்டுவரும் என்று தோன்றியது. மகிழ்ச்சியாகயிருப்பவரும் கண்ணாடி அணிந்தவருமான புலித்தேவன் பதுங்கு குழிக்குள் இருந்து தான் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படமொன்றை எனக்கு அனுப்பியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை நடேசன் உபயோகிக்க மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசீ மூலம் அழைப்புக்கொண்டபோது அந்த வார்த்தையை பிரயோகிக்க மறுத்திருந்தார். ஆனால், அதனைச் செய்யவே அவர் விரும்பியிருந்தார். புலிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க நம்பியார் பிரசன்னமாகியிருக்க வேண்டுமென்று அவர் விரும்பியிருந்தார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வின் 24 மணிநேரக் கட்டுப்பாட்டு நிலையமானது கொழும்பிலுள்ள நம்பியாருடன் எனக்குத் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தது. இது திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியாகும். நான் அவரை எழுப்பினேன். புலிகள் தமது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டார்கள் என்று நான் அவருக்குக் கூறினேன். தனக்கு நடேசனும் புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள் என்று இலங்கை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக எனக்குக் கூறினார். வெள்ளைக் கொடியொன்றை உயர்த்திப் பிடித்தவாறு வருவதே அவர்கள் செய்ய வேண்டியது என்று அவர் தெரிவித்திருந்தார். சரணடையும் போது சாட்சியமாக இருப்பதற்கு அவரால் வடக்கிற்கு அவர் போகக் கூடாதா என்று நான் கேட்டேன். அவர் அவசியம் இல்லையென்றார். அச்சமயம் லண்டனில் ஞாயிறு பின்னிரவாக இருந்தது. நடேசனின் செய்மதித் தொலைபேசியில் தொடர்பு கொள்ள நான் முயற்சித்தேன். முடியவில்லை. ஆதலால் தென்னாபிரிக்காவிலுள்ள புலிகளின் தொடர்புக்கு நான் அழைப்புவிடுத்தேன். நம்பியாருக்கும் செய்தியைத் தெரிவிப்பதற்காக அழைப்புவிடுத்தேன். வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்து அசைப்பதே அந்தச் செய்தியாகும். அதிகாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. நான் விழித்தெழும்பினேன். அதில் தென்கிழக்காசியாவில் இருந்து புலிகளின் மற்றொரு தொடர்பாடல் அழைப்பாகும். அவராலும் நடேசனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. “எல்லாம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்’ என்று அவர் கூறினார். “அவர்கள் யாவரும் இறந்துவிட்டனர்’ என்று நான் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

அன்று மாலை இலங்கை இராணுவம் அவர்களின் உடல்களை பார்வைக்கு வைத்தது. சரணடைவதற்கு என்ன நடந்தது. மிக விரைவில் நான் கண்டுபிடிக்கவேண்டும். ஞாயிறு இரவு இலங்கைப் பாராளுமன்றத்திலுள்ள தமிழ் எம்.பி.யான ரொகான் சந்திரநேருவுக்கு நடேசன் அழைப்பு விடுத்திருந்தார். அவர் உயர்மட்டத்துடன் தொடர்பு கொண்டார். அடுத்த மணித்தியாலங்களில் நிகழ்ந்தவற்றை எம்.பி. கூறியிருந்தார். நடேசனுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் பூரண பாதுகாப்பு அளிப்பதாக தமக்குக் கூறப்பட்டது என்றும் நடேசனுடன் 300 பேர் இருப்பதாகவும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதாகவும் நடேசன் தெரிவித்திருந்தார். சரணடையும் போது தான் செல்வதாக இலங்கை உயர்மட்டத்திற்கு தான் கூறியதாக சந்திரநேரு தெரிவித்திருந்தார். அங்கு செல்ல வேண்டிய தேவையில்லையென்றும் தனக்கு வீணாக அபாயத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியமில்லையென்றும் தமக்குக் கூறப்பட்டதாக சந்திரநேரு எம்.பி. தெரிவித்திருந்தார். திங்கட்கிழமை உள்ளூர் நேரம் 6.20 மணியளவில் நடேசனுடன் எம்.பி. தொடர்பு கொண்டார். துவக்குச் சூடு சத்தம் பெரிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நடேசன் கூறினார். வெள்ளைக் கொடியுடன் நான் போகப்போகிறேன் என்று நடேசன் தெரிவித்தார். உயரமாகக் கொடியைப் பிடித்துக் கொண்டு போகுமாறும் அவர்கள் அதனைப் பார்க்க வேண்டுமென்றும் மாலையில் உங்களை சந்திக்கிறேன் என்றும் தான் நடேசனிடம் கூறியதாக சந்திரநேரு எம்.பி. தெரிவித்தார். என்னநடந்தது என்று அந்த இடத்தில் இருந்து தப்பிய தமிழர் ஒருவர் கூறியுள்ளார். அவர் நிவாரணப் பணியாளர் ஒருவரிடம் அதனைத் தெரிவித்திருக்கிறார். நடேசனும் புலித்தேவனும் மற்றும் ஆண்களும் பெண்களுமாக ஒரு குழுவினர் வந்ததாகவும் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஐ.நா. தூதுவரான நம்பியாரின் பங்களிப்புக் குறித்து கேள்வி எழுந்துள்ளது. அவரின் சகோதரர் சதீஸ் நம்பியார் 2002 இல் இருந்து இலங்கை இராணுவத்திற்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.

விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்டிருந்தனர். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் என்பன தொடர்பாக அவர்கள் தடைசெய்யப்பட்டிருந்த போதும் புலித்தேவனும் நடேசனும் மோதலுக்கு அரசியல் தீர்வொன்றை காணவேண்டுமென்பதில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அவர்கள் உயிருடன் இருந்தால் தமிழ் சிறுபான்மையினருக்கு நம்பகரமான அரசியல் தலைவர்களாக இருந்திருக்கக்கூடும். கடந்த வாரம் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வதந்திகள் பரவியிருந்தன. அமைப்பு முழுக்க குழம்பிப்போயிருந்தது. உயிருடன் உள்ள தமிழ்த் தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு திரும்புவது பற்றிப் பேசினர். அதேசமயம், போராளிகளின் பிரதிநிதிகள் பழிவாங்கல் தாக்குதல் தொடர்பாக அச்சுறுத்தியிருந்தனர். பத்திரிகையாளர் என்ற முறையில் இந்த செய்தி குறித்து எழுதுவதற்கு கடினமான நிலைமையில் இருந்தேன். இலங்கைக்கு 2001 இல் நான் முதலாவதாகச் சென்றிருந்தேன். 5 இலட்சம் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை தடைசெய்திருப்பதாக வெளியான செய்திகள் குறித்து ஆராய்ந்து செய்தி எழுதுவதற்காகச் சென்றிருந்தேன். 6 வருடங்களாக பத்திரிகையாளர்களுக்கு வடக்கே அச்சமயம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மக்கள் மிகவும் கஷ்டமான நிலைமையில் இருந்தனர். மருத்துவர்கள் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து கோரிக்கை விடுத்தவாறு இருந்தனர். நடேசன், புலித்தேவன் போன்றவர்கள் தமது கோரிக்கைகளைத் தாங்கள் குறைத்துக்கொண்டிருப்பதாகவும் சுதந்திரத்தில் இருந்து இலங்கைக்குள் சுயாட்சியைக் கோரவிரும்புவதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தனர். இரவு வேளையில் நான் அவர்களின் இடத்திற்குக் கடத்திச் செல்லப்பட்டேன். ஆயினும் இலங்கை இராணுவத்தினர் பதுங்கியிருந்து நடவடிக்கையை மேற்கொண்டனர். ?பத்திரிகையாளர் பத்திரிகையாளர்? என்று சத்தமிடும்வரை நான் காயமடைந்திருக்கவில்லை. அதன் பின்னர் தமிழர்களுடன் எனக்கு இடைக்கிடையே தொடர்புகள் இருந்தது.

இராணுவத்தின் புதிய நடவடிக்கை புலிகள் எதிர்கொண்ட அண்மைய மாதங்களில் தலைமைத்துவத்திடமிருந்து எனக்குத் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் கிடைத்தன.ஒரு தொலைபேசி அழைப்பில் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுக்குத் தாங்கள் கட்டுப்படுவார்கள் என்று நடேசன் கூறியிருந்தார்.யுத்த நிறுத்தத்திற்கு அவர் மன்றாடிக் கேட்டார். அவரது கோரிக்கையை கொழும்பு நிராகரித்துவிட்டது. விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து வெற்றி கிடைத்துள்ளது. தமிழ்ப் பொதுமக்களின் விலை செலுத்தப்பட்டதாக அது வந்துள்ளது. இறுதி யுத்த நடவடிக்கையின் போது 7 ஆயிரம் பொதுமக்கள் இறந்ததாக ஐ.நா. கூறுகிறது. ஆயினும் அதன் இழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமென்றும் நம்பப்படுகிறது. மோதல் வலயத்திலிருந்த 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் முகாம்களுக்குள் உள்ளனர். அவர்களின் நிலைமை மிக மோசமாகிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு கூடாரத்திற்குள்ளும் மூன்று குடும்பங்கள் உள்ளதாக சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்கள் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தன. உணவுக்கும் தண்ணீருக்கும் பல மணிநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 44 ஆயிரம் பேர் உள்ள முகாமில் ஒரே மருத்துவரே இருப்பதாக ஒரு நிவாரணப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். உதவி வழங்கும் அமைப்புகளூடாக அகதிகள் சண்டே டைம்ஸ் (லண்டன்) உடன் தொடர்பு கொள்ள முடிந்தது. “நாங்கள் எப்படி வாழ்கிறோம்’ என்று முகாமில் இரு பிள்ளைகளுடன் இருக்கும் பெண்ணொருவர் கூறினார். எமக்கு இடமில்லை. வெயிலில் இருந்து பாதுகாப்பு இல்லை. கைதிகளாக முற்கம்பி வேலிக்குள் இருக்கின்றோம். இரண்டு பிள்ளைகளின் தாயான நான் என்ன செய்வேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாங்கள் ஏன் இங்கு இருக்கிறோம் என்று அந்தப் பெண் கேள்வியெழுப்பினார்.

நாட்டை ஐக்கியப்படுத்துவதாகவும் 80 வீதமான அகதிகளை ஆண்டு முடிவதற்குள் மீளக்குடியேற்றப் போவதாகவம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது யதார்த்த பூர்வமானது என்று நான் நினைக்கவில்லை. எவரையும் விடுவிப்பதற்கான நடைமுறை இல்லை என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் அன்னா நெய்சாட் டைம்ஸுக்குக் கூறியுள்ளார். அரசாங்கம் எத்தகைய நோக்கங்களை பிரகடனப்படுத்தினாலும் தமிழ் மக்களின் துன்பங்களுக்குத் தீர்வு காணப்படும் வரை எதிர்காலத்தில் இலங்கையை ஐக்கியப்படுத்தும் விடயத்தில் சிறிதளவே எதிர்பார்ப்புகள் காணப்படுவதாகத் தென்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

8 thoughts on “சரணடைய இடைத்தரகராக செயற்படுமாறு புலிகள் என்னை மன்றாட்டமாக கேட்டிருந்தனர் -லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நிருபர் மேரி கொல்வின் கூறுகிறார்..

  1. பிரபாகரன் இறந்துவிட்டாரா அல்லது ஒரு கோழையைப்போல் ஒடி ஒளிந்து கொண்டாரா என்பதல்ல பிரச்சனை. புலம்பெயர்வாழ் தமிழர்களிடமிருந்து தொடர்ந்து எப்படி பணம் பறிப்பது, அதை யார் கையாள்வது என்பதில்தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடுதான் அறிவழகனின் அறிக்கையும், அதற்கு பத்மனாதனின் மறுப்பறிக்கையும். ஈழத்தமிழர்களின் நலனில் புலிகளுக்கோ அல்லது அவர்களின் தமிழக‌ ஏஜண்டுகளுக்கோ என்றைக்குமே அக்கறை இருந்ததில்லை. புலிகளுக்கு அவர்கள் ஒரு காட்சிப் பொருள். தமிழக அரசியலுக்கு அவர்கள் தேர்தலுக்கான விளம்பர குறுந்தகடு(C.D). தமிழர் நலனின் உண்மையான அக்கறையுள்ளவர்கள் இவர்களைப் புறக்கணித்துவிட்டு அவதியுறும் தமிழ் மக்களுக்கு உதவ முன்வாருங்கள்

  2. கருணா தலைமையிலான ஆயுததாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த விரும்புவதாகவும், அவர்களுடன் தாமும் இணைந்த செயற்பட விரும்புவதாகவும் திட்டமிட்டு பிரபாகரனால் கிழக்கிற்கு அனுப்பப்பட்ட ஆயுததாரிகள் வெள்ளைக் கொடியினை எந்தியவாறு கருணா தரப்பினருடன் இணைவதாக நாடகமாடி வெருகல், கதிரவெளி ஆகிய கிராமங்களில் நிலைகொண்டிருந்த 310 இளைஞர்களையும், யுவதிகளையும் 10.04.2004 ந் திகதியன்று தெரு நாய்கள்போன்று ஒரே நாளில் சுட்டுக்கொன்றனர், அவர்களை சுட்டுக்கொன்றது மட்டுமன்றி அவர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாது நாய்கள், நரிகள், காக்கைகள் போன்ற பிராணிகளும் பறவைகளும் உண்பதற்கு வழியமைத்தனர்.

  3. எல்லாளன்; துட்டகைமுனுவால் வெற்றி கொள்ளப்பட்டபோது எல்லாமக்களையும் அழைத்த மரணச்சடங்கினை துட்டகைமுனு செய்ததாகவும், எல்லாளனுடைய சமாதியைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களது தொப்பிகளையும் , பாதணிகளையும் நீக்கவேண்டுமென்றும் ஒரு கௌரவத்தினை ஏற்படுத்தினார். ஆனால் இன்று பிரபாகரனுடைய மரணத்திற்கு இன்றைய துட்டகைமுனு வழங்கினாரா? என்ற வினாவிற்கான விடை எல்லோருக்கும் தெரிந்ததே! ஏனெனில் எல்லாளன் பயங்கரவாதியல்ல, சகல மக்களையும் நேசித்த சகல மக்களும் நேசித்த மன்னன்.

  4. பிரபாகரனும் ஏனையவர்களும் சரணடய

    விரும்பியிருந்தால் சிங்கள அரசும் சர்வதேசமும்

    கேட்டபோதே ஒப்புக்கொண்டிருப்பார்கள். ஏன் கழுத்து

    வரைக்கும் தண்ணீர் வரும் வரை பார்த்துக்

    கொண்டிருக்க வேண்டும்? அறிவு ஜீவிகளே !

    சிந்தியுஙகள்…. கேக்கிறவன் கேணையன் என்றால்

    எலி கூட யானையை தூக்குமாம். சர்வதேசத்துக்கு

    ஈளத்தமிழன் ஒரு கேணையனாய் போயிட்டன்…..

  5. புலன்பெயர்ந்து வாழும் புலிகஆதரவாளர்களின் கவனஈர்ப்பு போராட்டங்களும், சாலைமறிப்பு போராட்டங்களும் புலிகளின் தலைவரை காப்பாற்ற தவறியிருந்தனத, பிரித்தானிய உட்பட சில மேற்கத்திய நாடுகளின் ஊடாக யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்தி தலைவரை காப்பாற்றுவதற்கு புலிகளின் சர்வதேச தொடர்பாளர் பத்மநாதன் உட்பட பல முக்கியஸ்தர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இலங்கைஅரசு இணங்கவில்லை. பிரபாகரனின் உயிருக்கு ஏதாவது நிகழ்ந்தால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்போன்ற புலி ஆதரவு தமிழ கட்சிகளின் மிரட்டல்களுக்கு இந்திய மத்தியஅரசு மசியவில்லை.
    இவ்வகையான ஒரு இக்கட்டான நிலையில் தமிழ்தேசியகூத்தமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சந்திரகாந்தன் பசில் ராஜபக்சேயுடன் இரகசிய பேரம் பேசலில் ஈடுபட ஆரம்பித்து இருந்தனர். அரசு முன்வைத்த நிபந்தனைகளை புலிகள் நிறைவேற்றும் பட்சத்தில் பிரபாகரனை அவருடன் சேர்த்து 10 பேர்களை அரசபடையினர் தப்பி செல்ல அனுமதிப்பது என்ற உடன்படிக்கைக்கு தமிழ் தேசிய் கூத்தமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பசில் ராஜபக்சேயுடன் உடன்பட்டு இருந்தனர்.
    புலி தலைவர்களை வெளிநாட்டிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை பத்மநாதன், புலி ஆதரவு தமிழக தலைவர் ஒருவர், ஐயிரோப்பிய சமாதான தூதுவர் ஆகியோர் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அரசின் நிபந்தனைக்கு இணங்க புலிகள் ஒரு வாரத்திற்கு முன்னரே ஆயுத கிடங்கினை வெடிக்க வைத்து இருந்தனர். அடுத்த நிபந்தனையாக 16 ஆம் திகதி அவர்களுடன் வைத்திருந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை செல்வதற்கு அனுமதித்து இருந்தனர். இதனை தொடர்ந்து 100மீற்றர் நீளமும் 200மீற்றர் அகலமும் உள்ள பிரதேசத்திற்குள் புலி தலைவர்கள் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர். புலி தலைவர்களை தப்பி செல்வதற்கு அனுமதிப்பது என்ற இரகசிய உடன்படிக்கைக்கு மாறாக அரச படையினர் அவர்களை சுற்றி வளைத்து இருந்தனர். பசில் ராஜபக்சே உறுதியளித்தமைக்கு மாறாக அரசபடையினர் புலி தலைவர்களை சுற்றி வளைத்ததும், பிரபாகரன் தனது செய்மதி தொலைபேசியில் பத்மநாதன் ஊடாக ஐரோப்பிய சமாதான தூதுவருடன் தொடர்பு கொண்டு நிலமையினை அறிவித்து இருந்தார். நிலைமை மோசமாகி போனதை சமாதான தூதுவர் உணர்ந்து கொண்டார், ஆனால் அவரினால் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருந்தார்.
    மாற்று வழியின்றி அரசியல் துறை பொறுப்பாளர் நடேசனும் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனும் முன்வரிசையில் வெள்ளை கொடியுடன் செல்ல பிரபாகரன், பொட்டம்மான், சூசை உட்பட ஏனையோர் அவர்களை பின்தொடர்ந்து சென்று 17 ஆம் திகதி அதிகாலை அரசபடையினரிடம் சரண் அடைந்தனர். ஜனாதிபதி 17 ஆம் திகதி இலங்கை வந்த பின்னர் பசில் ராஜபக்சே கோத்தபாய ராஜபக்சே சரத் பொன்சேகா ஆகியோருடன் ஆலோசித்து விட்டு பிரபாகரன் உட்பட அனைத்து உயர்மட்ட தலைவர்களையும் கொல்வது என முடிவு எடுத்தனர்.
    சரண் அடைந்த புலி தலைவர்கள் விசாரனைக்கு உடபடுத்தப்பட்ட பின்னர் மிக குறுகிய தூரத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்டனர். புலனாய்வு துறை பொறுப்பாளர் பொட்டம்மானிடம் கடந்த 26 வருட கால செய்திகளை சேகரிப்பதற்கு அரசபுலனாய்வுதுறையினருக்கு குறைந்தது 6 மாதம் ஆவது வேண்டும். பசில் ராஜபக்சே தமிழ் தேசிய கூத்தமைப்பினர் மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சந்திரகாந்தன் ஊடாக புலி தலமையினை சாதூர்யமாக சரணடைய செய்து விட்டு நயவஞ்சகமாக சரிக்கப்பட்டது.

  6. வடமராட்சியில் வைத்து அரச படைகளினால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் பிரபாகரனின் உயிரை காத்த ராஜீவ் காந்திக்கு கிடைத்த பரிசுதான் அவரின் மீதான தற்கொலை தாக்குதல். இந்திய இராணுவத்திடமிருந்து காப்பாற்றிய பிரேமதாசவுக்கு பிரபாகரன் கொடுத்த பரிசுதான் அவரின் மீதான தற்கொலை தாக்குதல். கிட்டு எங்களுக்குள் இருக்கும் பிரசனைகளை நாம் பேசி தீர்போம் என ரெலோ தலைவர் ஸ்ரீ சபாரட்ணம் கோண்டாவில் குமரகோட்டத்தில் உள்ள குடிசை ஒன்றிற்கு வெளியே வைத்து உயிர் தஞ்சம் கோரிய போது புலிகள் செய்த கொலை எவ் வகையானது? மட்டக்களப்பில் புளொட் இயக்கத்துடன் சமாதான பேசுவதாக சென்று பேசி விட்டு மறுநாள் தமது அலுவலகத்திற்கு விருந்திற்கு வருமாறு அழைத்து விட்டு வீதியில் மறைந்திருந்து அந்த இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் வாசுதேவா, இராணுவ துறை பொறுப்பாளர் கண்ணன் உட்பட 12 இற்கு மேற்பட்ட உயர்மட்ட தலைவர் கொல்லப்பட்டது, எவ் வகையான கொலை? பேச வாருங்கள் என புளொட்டின் தளப்பொறுப்பாளர் மெண்டிசை அழைத்து சென்று அவரை அடித்து கொன்றமையினை எவ் வகையான கொலையென அழைப்பது? புலிகளை ஆதரித்து வளர்த்து விட்ட அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றவர்களுடன் அமைதியான முறையில் பேசுவதாக கூறி மங்கையற்கரசி கொடுத்த தேனீரை அருந்தி கோரத்தனமாக கொலை செய்தமையினை எப்படி அழைப்பது? ஆண்டவனை வணங்கி கொண்டு இருக்கையில், விளக்கினை அணைத்து விட்டு ஆண்டவனின் ஸ்தலத்திலேயே வைத்து நூற்றுக்கணக்கான முஸ்லீம் மக்களை கொன்றொழித்தமையினை எவ்வாறு அழைப்பது?. வவுனியாவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு காணிகளை வழங்கி குடியமர்த்திய பாரூக்கை கடத்தி சென்று அவர் விரும்பி சென்றதாக தெரிவித்து அவரின் படங்களை பிரசுரித்து விட்டு சுட்டு கொன்றமையினை எப்படி அழைப்பது? புலிகளின் தலைவர் எவ்வாறு ஏனைய அமைப்புக்களின் தலைவர்களை உறுப்பினர்களையும் நம்ப வைத்து நயவஞ்சகமாக கொன்றொழித்தாரோ அதே பாணியில் அவரின் கதையும் முடிக்கப்பட்டு விட்டது.

  7. சர்வதேசம் உதவும்..புலம் பெயர் தமிழரின் போராட்டத்தால் ஒரு முடிவு வரும்..இந்திய தேர்தல் எண்டு எல்லாம் கனாக்கண்டு விட்டு, பின்னர் எல்லாம் தமக்கு எதிராக வந்த பின்னர் ஒண்டும் செய்ய முடியாது எண்டு விட்டு, உயிர் தப்ப எல்லோரிடமும் மன்றாடியாது அம்பலமாகிவிட்டது….

    ஆனாலும், தலைவர் வந்து உண்மையை சொல்லும் வரை இந்த மந்தை கூட்டம் நம்ப போவது இல்லை….

    உலகத்தில் எல்லோரும் பொய் தான்…. பத்பநாதனும் பொய் தான்….. தலைவர் சொன்னா மட்டும் உண்மை….. அதற்காகவாவது தலைவர் மீண்டு வர வேண்டும்….

Leave a Reply

Previous post மோதல் பகுதிகளில் பணியாற்றிய வைத்தியர்கள் விசாரணைக்கு உபடுத்தப்பட்டனர்..!!
Next post இராணுவத்தின் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு