முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை

Read Time:1 Minute, 47 Second

விடுதலைப் புலிகளின் முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சாதாரண பிரஜைகள் போல வெளிக்கொணரப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் பலவந்தமாக இணைக்கப்பட்ட பல சிறுவர் போராளிகள் குறித்து மோதலின் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கையில் கவனம் செலுத்தப்படுமென ஐ.நா. செயலாளர் பான்கீ மூனின் இலங்கை விஜயத்தின் பின்னர் வெளியிடப்பட்ட இணைந்த அறிக்கையில் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது. “சிறுவர் போராளிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என இலங்கைக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகக் கூறியுள்ளார். சரணடைந்தவர்கள் யுனிசெப் அமைப்பின் உதவியுடன் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவார்கள்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “முன்னாள் சிறுவர் போராளிகளை புனர்வாழ்வளிப்பதற்கு யுனிசெப் அமைப்புடன் இணைந்து இலங்கை அரசாங்கம் ஏற்கனவே எடுத்திருக்கும் நடவடிக்கைகளை ஐ.நா. செயலாளர் வரவேற்றுள்ளார்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

5 thoughts on “முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை

  1. தமிழர் மத்தியில் இருந்த அப்பழுக்கற்ற தலைவர்களான விசுவானந்ததேவன், பத்மநாபா போன்றவர்களையும் அரசியல் சாணக்கியம் மிக்க நீலன் திருச்செல்வம் போன்றவர்களையும் மகத்தான சமுக தலைவர்களான கேதீஸ்வரன், சுபத்திரன்,விமலேஸ்வரன் விஜிதரன் போன்றவர்களையெல்லாம் படுகொலை செய்து இலங்கைத்தமிழர் மத்தியில் தீர்க்கதரிசனமிக்க தீரமிகு தலைவர்கள் எவரும் இல்லாத அரசியல் வெறுமையை ஏற்படுத்தி விட்டு கோழைத்தனமாக சரண் அடைந்து தம்முயிரை காக்க முயன்ற படுகொலை மட்டுமே செய்ய தெரிந்த பேடி முட்டாள்கள் ஒழிந்தது இலங்கை மண்ணிற்கு விடிவை கொண்டு வந்துள்ளது..

  2. முதன் முதலில் சுயாட்சிக் கழக நவரட்னம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தார்.அப்போது மக்கள் அவரையும் அவருடைய தீர்வையும் ஏற்றுக்கொள்ளவில்லை.அப்போது இந்த தனிநாட்டு தீர்வை அமிர்தலிங்கம் “தற்கொலைக்கு ஒப்பான தீர்வு”என்றார். இந்த இடைக்கால கட்டத்தில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றோர் தேர்தலில் தோற்றதைத் தவிர வேறு மாற்றம் எதுவும் நடைபெறவில்லை. அமிர்தலிங்கம் தனது தேர்தல் சுயநல அரசியலுக்காகவே தமிழீழ தனிநாட்டு தீர்வை முன்வைத்தார் என்பது உணர முடிகிறது. வட்டுக்கோட்டை தனி அரசு பிரகடனப் பாதை, ஒரு பிடி சோற்றுக்கும், திறந்த வெளிச் சிறை வாழ்வுக்கும், நிவாரணத்தில் தங்கி வாழ்வதற்கும், நாடோடியாக அகதியாக அலைவதற்கும் வித்திட்டுள்ளது.
    1977 ம் ஆண்டு யூலை மாதம் 21ந் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது வேட்பாளர்களை நிறுத்தியபோதும் அக்கோரிக்கை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த 878,143 தமிழ் வாக்காளர்களில் 394,992 வாக்காளர்கள் மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வாக்களித்தனர். இத்தொகை மொத்த தமிழ் வாக்காளர்களில் 45% வாக்காளர்கள் மட்டுமே த.வி.கூட்டணியினருக்கு வாக்களித்தனர். ஒரு தனி இறைமை பெற்ற நாட்டினுள் ஒரு நாட்டினை அமைப்பதானால் குறைந்தபட்சம் 67%மக்களின் ஆதரவு பெறவேண்டியது கட்டாயமானதென்பதே சர்வதேச நியதியாகும்.
    தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடக்குகிழக்கில் இருந்த மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நாட்டைவிட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டார்கள். இன்னுமொரு மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் நிரந்தரமாக தெற்கில் குடியேறிவிட்டார்கள். வடக்கு கிழக்கில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களே உள்ளனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களின் சகல ஜனநாயக உரிமைகளையும் உள்ளடக்கியது. தனி மனிதனின் கருத்து சுதந்திரம் பெண்களின் உரிமைகள் சிறார்களின் உரிமைகள் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் தொழிற்சங்க உரிமைகள் கருத்து வேறுபாடுகளுக்கும் உடன்பாடுகளுக்குமான இடைவெளிகள் இவற்றை நிராகரிப்பதாக இவற்றுடன் முரண்படுவதாக இனங்களின் சுயநிர்ணய உரிமை இருக்க முடியாது.
    சுயநிர்ணயம், சுயாட்சி, சமஸ்டி போன்ற கோட்பாடுகள், இலங்கையைப் பொறுத்தவரையில், சிங்கள – தமிழ் இனவாதிகளால் மக்கள் மத்தியில் அச்சமூட்டும் விடயங்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சமஸ்டி பற்றி பேசிய தமிழரசுக்கட்சியாலும், பின்னர் அதை பிரிவினைவாதமாக மாற்றிய தமிழர் விடுதலைக்கூட்டணியாலும், அதையே அடிப்படையாக வைத்து பிரிவினைவாத யுத்தம் நடாத்திய புலிகளினாலும், அந்த கோட்பாடுகள் சிங்களமக்கள் மத்தியில் பிரிவினைவாத தத்துவமாக விளங்கவைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் பிரிவினையை கோரி நிற்கவில்லை என்பதை நடைமுறையில் நிரூபிக்கும் வகையிலான இடைக்கால தீர்வொன்றை நடைமுறைப்படுத்துவது அவசியம்.

  3. ரொம்ப நல்ல விஷயம்…
    ஆனாலும் ரொம்ப கவனமாக இருங்கள்…
    நம்ப வைத்து கழுத்து அறுப்பது புலிகளுக்கு கை வந்த கலை…
    ராஜீவ் , பிரேமதாச கொலைகள் அதை தான் சொல்லுது….

  4. மகாதேவா…
    ஏன் “நீ தமிழனா?” எண்டு மட்டும் நிறுத்திவிட்டாய்?
    உங்கள் பாசையில் “ஒரு அப்பனுக்கு பிறந்தாயா?” ” சிங்களவனுக்கு பிறந்தாயா?”
    அப்படி எல்லாம் கேக்க வேண்டியது தானே….
    எமக்கு கோபம் வராது, உங்கள் புளித்துப்போன புலம்பலை கேட்டு… ஆகவே.. தாராளமாக திட்டலாம்….

    ஆனால், உண்மை, எபோதும் உண்மை தான்…..

Leave a Reply

Previous post வவுனியா யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல்..
Next post இந்தியா தர மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதக் கொள்வனவு: சரத் பொன்சேகா