கொழும்பில் 14தற்கொலை குண்டுதாரிகள் -அமைச்சர் யாப்பா தகவல்

Read Time:1 Minute, 55 Second

கொழும்பில புலி இயக்கத்தைச் சேர்ந்த 14 தற்கொலைதாரிகள் இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்தன நேற்றுக்காலை தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போது தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் இனப்பிரச்சனைக்கு நியாயமான தீர்வைக் காணுமாறு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கையிடம் கோரியுள்ளன. இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் எமது அரசாங்கம் முன்னிரிமை வழங்கும். பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும். வன்னியில் புலிகளுக்கு எதிராகவே நாம் யுத்தத்தில் ஈடுபட்டோம் தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல வெளிநாடுகளில் உள்ள எமது தூதரகங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளோம். அதேபோல் இந்த யுத்தத்திற்கு உதவிய சீனா, ரஷ்யா போன்ற தூதரகங்களுக்கு நாம் பாதுகாப்பு வழங்குவோம் அவசரகால சட்டத்தையோ பயங்கரவாத தடுப்பு சட்டத்தையோ இப்போது நீக்க முடியாது அச்சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் இன்னும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் இதனால் இச்சட்டத்தை தற்போதைய நிலையில் நீக்கமுடியாது காலம் வரும்போது அதை நீக்குவோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

2 thoughts on “கொழும்பில் 14தற்கொலை குண்டுதாரிகள் -அமைச்சர் யாப்பா தகவல்

  1. ya……ya….first one for whom? …you don’t know??…

  2. ஏன் ஐயா உங்களுக்கு இந்த வேலை.?
    உங்கள் தலைவர்கள் எல்லாம் தம்மை வெடிக்க வைக்க பயந்து முழுசா ராணுவத்திடம் சரணடைந்த பொது, நீங்கள் மட்டும் உங்கள் உடலை தெருவில் சிதற செய்யப்போரீர்கள?
    அப்படி செய்து என்ன காணப்போகிறீர்கள்?
    பிரேமதாசவை கொலை செய்தீர்கள்.. என்ன கண்டீர்கள்?
    சந்திரிகாவை கொலை செய்ய முயற்சி செய்தீர்கள்…என்ன கண்டீர்கள்?

    ஆக உங்களையும் அழித்து, ஒரு தலைவரை கொலை செய்தது , ஏராளமான பொதுமக்களையும் கொலை செய்வதால் என்ன லாபம்?

    சிந்தியுங்கள்… உங்கள் தலைவர்கள் போல நீங்கள் சரண் அடைய தேவை இல்லை….
    எல்லாவற்றையும் விட்டு விட்டு மக்களோடு மக்களாக , சாதரண வாழ்வுக்கு திரும்புங்கள்.
    இங்கே சந்தோசமாக இருக்கும் சில புல்லுருவிகள், உங்களை ஊக்கப் படுத்துவினம்..
    நீங்கள் ஏன் அவர்கள் போல , சந்தோசமாக சாதரண வாழ்க்கைக்கு திரும்ப கூடாது?

Leave a Reply

Previous post ஊவாமாகாணசபை இன்று கலைப்பு!!
Next post பிரபாகரன் உயிரிழந்தமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதி -இராணுவப பேச்சாளர்