யுத்தக் குற்றம் குறித்து விசாரணை நடத்தப்படாமை அதிருப்தியளிக்கிறது -ஐரோப்பிய ஒன்றியம்

Read Time:2 Minute, 2 Second

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்படாமை அதிருப்தியளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பாரிய மனித உரிமைமீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வடக்கை மீட்பதற்கான இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின்போது யுத்தக் குற்றங்களை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் நடத்தப்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் மனித உரிமைகள் பேரவையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையுமெனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமை பேரவையினால் வழங்கப்பட்ட இத்தீர்மானம் யதார்த்தத்திற்கு புறம்பானதென்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடென்றும் குறிப்பிட்டுள்ளது. மோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கான சகல முயற்சிகளையும் தமது அமைப்பு முன்னெடுக்குமென்றும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “யுத்தக் குற்றம் குறித்து விசாரணை நடத்தப்படாமை அதிருப்தியளிக்கிறது -ஐரோப்பிய ஒன்றியம்

  1. ஐயா …
    ஈராக்கிலும் மற்றும் சில முஸ்லிம் நாடுகளில் உங்கள் நேச நாடுகளின் ராணுவம் செய்த அட்டூழியத்தை முதலில் ஆராயுங்கள்……

    அங்கே உங்கள் ராணுவம்.. மக்களை கொல்லாமல் தானே சதாமை விழுத்தினார்கள்…. ஹிஹி…………….

    மடையர்களே…. உங்களை முதலில் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்………

    இராக் வன்முறைக்காக , புஷ் ஐ தண்டியுங்கள் முதலில்…. அதை விடுத்து அபிவிருத்தி அடைந்து வரும் மூன்றம் உலக நாடுகள் மீது கை வைக்க வேண்டாம்….

    சதாம் கொலை செய்த மக்களை விட, நேச ராணுவம் கொலை செய்த மக்களே அதிகம்….
    ஆனால் புலிகள் கொலை செய்த மக்களுடன் பார்க்கும் போது, ராணுவம் கொலை செய்தது குறைவே…..

Leave a Reply

Previous post யாழ். அருட்தந்தை ஒருவர் காணாமற் போனதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் முறைப்பாடு
Next post எங்களால் இலங்கை இராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் -பாகிஸ்தான் இராணுவம் தெரிவிப்பு