மட்டக்களப்பில் எலும்புக்கூடுகள் மீட்பு…

Read Time:1 Minute, 36 Second

மட்டக்களப்பு மாநகர சபைப் பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் சபைக்குச் சொந்தமான வெற்றுக் காணியில் இருந்த புதைகுழி ஒன்றிலிருந்து பழைய எலும்புக்கூடுகளும் மனித எச்சங்களும் நேற்று முந்தினம் மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்லடி காளி கோயில் வீதியிலுள்ள இவ்வளவினுள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனொருவனின் காலில் எலும்பொன்று குத்திக் காயமேற்படுத்திய போதே மனித எலும்பென்று இனங்காணப்பட்டு, அயலவர்களின் உதவியுடன் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸாரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி வீ. இராமகமலன் முன்னிலையில் புதைகுழி தோண்டப்பட்ட போது பழைய எலும்புத் துண்டுகள் வெளிப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதியில் பெருமளவில் எலும்புக் கூடுகள் இருக்கும் என்பதால், இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள இரசாயனப் பகுப்பாய்வுப் பிரிவினர் வரும்வரை புதைகுழி தற்காலிகமாக மூடிவைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தையை திருடிய இருவர் கைது பெற்றோரைத் தேடும் பணியில் பொலிஸார்
Next post சுற்றுலாப் பயணிகள் விசாவுடன், புடவைத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஏழு இந்தியர்கள் கைது