சுற்றுலாப் பயணிகள் விசாவுடன், புடவைத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஏழு இந்தியர்கள் கைது

Read Time:1 Minute, 43 Second

சுற்றுலாப் பயணிகள் விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக புடவைத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஏழு இந்தியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கான விசா விதிமுறைகளை மீறியுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் ஏழுபேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவு பொறுப்பாளர் டபிள்யூ. தேவேந்திர ராஜா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சட்ட விரோதமாக ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் குடிவரவு, குடியகல்வு சட்ட விதி முறைகளின்படி சுற்றுலாப் பயணி விசா பெற்றுவரும் வெளிநாட்டவர் உள்ளுரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. இந்த ஆண்டில் மாத்திரம் விசாவிதி முறைகளை மீறிய 120 வெளிநாட்டவர்கள் தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் எலும்புக்கூடுகள் மீட்பு…
Next post கே.பி.யை கைது செய்ய மேற்கொண்ட மொஸாட் அதிரடி நடவடிக்கை…