பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பாளர் கொலை.. சந்தேகநபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைப்பு

Read Time:2 Minute, 0 Second

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஜமால்தீன் படுகொலை தொடர்பாக அண்மையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றினை கல்முனை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் சமர்பித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி விடுமுறையில் மருதமுனையிலுள்ள தனது வீட்டுக்கு சென்றிருந்த வேளை பள்ளிவாசலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று திரும்பும்வழியில் இவர் சுட்டுக்கொல்லப்பட்டார் இக்கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை விடுதலைப்புலி உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் மண்டூர் 13ம் கொலனியைச்சேர்ந்த வீரா எனப்படும் செல்லத்துறை தேவேந்திரன் என்பவர் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீதான விசாரணையில் கிடைத்த தகவலின்படி மருதமுனையைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் உரிமையாளராக சுலைமான் லெப்பை நஜிமுல் ரகுமான் மற்றும் நற்பிட்டிமுனையை சேர்ந்த மொஹமட் காசிம் ஹம்சா ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் தற்போதய தலைமை செயலகம் பனாகொட இராணுவ முகாமா? – திடுக்கிடும் தகவல் அம்பலம்
Next post கே.பி. பகீர் வாக்குமூலம்… பின்னணியும் பிரளயமும்!