வவுனியா நலன்புரி நிலைய மக்களுக்கு தற்காலிக அடையாள அடையாள அட்டை வழங்கல்..

Read Time:1 Minute, 38 Second

வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் தற்காலிக அடையாள அட்டைகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றது இதுவரை ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மக்களின் தரவுகள் ஜனாதிபதி செயலகத்தினால் பதியப்பட்ட போதிலும் ஒரு லட்சத்தி ஆயிரம் பேருக்கான அடையாள அட்டைகளே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் அடையாள அட்டையில் பெயர் முகவரியுடன் அவர்களது தொழில் இறுதியாக வாழ்ந்த பிரதேச செயலாளர் பிரிவு அடையாள அட்டை இலக்கம் போன்ற விபரங்களுடன் இவர்களுக்கான தொடர் இலக்கங்கள் பதியப்பட்டன பிளாஸ்டிக் மட்டையில் புகைப்படமும் காணப்படும் இந்த அடையாள அட்டையில் காணப்படும் பார்கோட் எனப்படும் பகுதியில் குடும்பத்தினரது முழு விபரங்களும் மறைமுகமாக அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நடமாடும் சேவைமூலம் செயற்படுத்தப்படும் இந்த நடவடிக்கையில் 35முதல் 40உத்தியோகத்தர்கள் ஈடுபடும் அதேவேளை அடையாள அட்டைகள் பொலிஸார் மூலமாகவும் உரியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாடுகளிலுள்ள புலிகளின் சொத்துக்களை எங்களிடம் ஒப்படைக்கவும் – கோத்தபாய ராஜபக்ஷ
Next post வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் நிரந்தரமாக முகாம்களாக மாற்றப்படும் -அரசாங்கம் தெரிவிப்பு