திடீரெனப் பணக்காரர்களான பாதுகாப்பு அதிகாரிகள்: விசாரணைகள் ஆரம்பம்

Read Time:3 Minute, 26 Second

anifoxy-001இரவுடன் இரவாக இலட்சாதிபதிகளாகிய சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விடுதலைப் புலிகளுக்கும், இவர்களுக்கும் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விசாரணை நடைபெறுவதாகவும் தெரியவருகிறது. விடுதலைப் புலிகளின் உளவாளிகளாகப் பல சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளும், பொலிஸாரும் செயற்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இதனை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பின் பல்வேறு பகுதிகளில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், ஜனாதிபதியைப் படுகொலை செய்வதற்கான முயற்சி போன்றவற்றிற்கான திட்டங்களை வகுப்பதில் இந்த சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பு பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பொலிஸ் அத்தியட்சகர், இராணுவ லெப்டினட் கேணல் மற்றும் இராணுவ மேஜர்கள் சிலர்; இந்தச் சதித்திட்டங்களில் தொடர்புபட்டிருந்ததாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது. இதனைவிட இன்ஸ்பெக்டர் தரத்திலுள்ள பல்வேறு பொலிஸாரும், மேஜர் தரத்திற்குக் கீழுள்ள இராணுவத்தினர் பலரும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி, அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அமைச்சர்களைப் படுகொலை செய்யும் திட்டங்களுக்கு உதவியதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய இராணுவ மேஜர் ஜென்ரல் அதிகாரி ஒருவரும், கேணல் ஒருவரும் ஐரோப்பிய நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருந்ததாக இவர்கள் குறித்து விசாரணை செய்யும் அதிகாரி ஒருவர் கூறிள்ளார். விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்த பலருக்கு வெளிநாடுகளில் வீடுகளும், சொகுசு வாகனங்களும் வழங்கப்பட்டிருந்ததாகவும், அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே மற்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு உதவிபுரிந்த பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரேக்கு இங்கிலாந்தில் வீடொன்றும் 6-7 சொகுசு வாகனங்களும் விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “திடீரெனப் பணக்காரர்களான பாதுகாப்பு அதிகாரிகள்: விசாரணைகள் ஆரம்பம்

  1. ராஜபக்ச சகோதரர்கள் கொன்றுவிடுவது என்று முடிவு செய்தபின்பு அறநூறு வழக்கு என்ன ஆயிரம் வழக்கு கூட போடுங்கள். ஆனால் என்றாவது ராஜபக்ச சகோதரர்கள் மக்கள் முன்பு பதில் சொல்லும் காலம் வரும் அப்போது அவர்கள் எங்கு இருகிறிர்களோ தெரியாது. உலகத்திலே உள்ள குற்றங்களை கணக்கிட்டால் கூட எண்ணிக்கை அறுநூரை தாண்டாது. ஒரே விந்தையாக உள்ளது… இப்படியும் ஒரு மனிதனுக்கு குற்ற வழக்கில் தள்ள முடியுமா என்று. இதே பாணியை இனிமேல் நம் சிங்கள நாட்டு அரசியல்வாதிகள் கடைப்பிடிப்பார்கள் என்று நினைக்கிறேன்..ஒரு தனி நபர் மீது 600 குற்றச்சாட்டுகளா??? அப்படியென்றால் உங்கள் நாட்டில் எத்தனை விதமான குற்ற சட்டங்கள் உள்ளன சரத்பொன்சேகா xxx அனேகமாக குற்ற சட்டங்கள் அதிகமாக உள்ள நாடு ஸ்ரீலங்கா என கின்னஸ் புத்தகத்தில் எழுதலாம் போலுள்ளதே அடப்பாவிங்கள ஒரு முடிவு பண்ணிட்டிங்க இனி அவரை யார் காப்பாற்றுவது ? எதிரிகளை கண்டுகொள் .விழித்திடு தமிழ் மக்களே, விழித்திடு தமிழ் மக்களே,விழித்திடு தமிழ் மக்களே…3 லட்சம் மக்கள் முட்கம்பிவேலிக்குள், நிலத்தில் கால் வைக்கமுடியாத அளவு மழைநீர் வெள்ளத்தில் தத்தளிக்க, குடி நீருக்கு காத்திருக்க… Karuna மற்ற தண்ணியில் மிதந்துகொண்டுடிருக்கிறார்????

Leave a Reply

Previous post விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-1)
Next post விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-2)