‘கப்டன் அலி’ நிவாரணப் பொருட்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்..

Read Time:3 Minute, 40 Second

vanni_missionவன்னி மக்களுக்கு உதவுவதற்காக புலம்பெயர் தமிழர்களால் சேகரித்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்புத் துறைமுகத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. 660 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் அடங்கியுள்ள பொருட்களின் தரம் மற்றும் பாவனைக்கு உகந்த நிலை என்பன குறித்து பரிசோதித்து ஆவணங்களை வழங்க வேண்டிய அரச நிறுவனங்கள் இன்னும் அவற்றை வழங்காததே தாமத்துக்கு காரணம் என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கொள்கலன்கள் துறைமுகத்திலேயே கிடப்பதால் துறைமுக அதிகார சபைக்குச் செலுத்த வேண்டிய வாடகை 15 லட்சமாக உயர்ந்துவிட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கான இயக்குநர் நாயகம் சுரேன் ஜே.எஸ்.பீரிஸ் தெரிவித்தார். கொள்கலன்களில் உள்ள பொருட்கள் பாவனைக்கு உகந்தவையாக என்பதை சுகாதார அமைச்சு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், அணுசக்தி அதிகார சபை ஆகியன பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க வேண்டும். இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்வரும் புதன்கிழமை சான்றிதழ்கள் கிடைத்துவிடும் என செஞ்சிலுவைச் சங்கம் எதிர்பார்க்கிறது.

பால் சார்ந்த பொருட்களை சோதிப்பதிலேயே தாமதம் ஏற்படுவதாக தகவல் வட்டாரங்கள் கூறின.

‘கப்டன் அலி’ கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட இந்தப் பொருட்களை ஏற்க முடியாது என சிறிலங்கா அரசு திருப்பி அனுப்பி இருந்தது. அதன் பின்னர் இந்தியா தலையிட்டு அந்தப் பொருட்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக வேறு கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைத்தது.

புலம்பெயர் தமிழர்களின் பொருட்கள் இடம்பெயர்ந்த பின் வன்னியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சென்று சேரக்கூடாது என்ற அரசின் பிடிவாதத்தின் காரணமாகவே பொருட்களை துறைமுகத்தை விட்டு நகர்த்துவதற்கான அனுமதி தாமதப்படுத்தப்படுகின்றது என தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைப் பெற்று பொருட்களை வெளியே அனுப்புவதற்குப் பதில், முதல் கொள்கலன்களில் உள்ள பொருட்களின் விபரங்கள் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால் அனுப்பப்படவில்லை என்ற காரணமும் இப்போது தரநிர்ணய அமைப்புக்களின் சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற காரணமும் சொல்லப்படுகின்றன என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “‘கப்டன் அலி’ நிவாரணப் பொருட்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்..

  1. சிங்களவன் எடுக்கிறது பிச்சை அதிலை கௌரவப்பிரச்சனை .

    அரைவாசிக்குமேல் சிறீலங்காவின் பொருளாதாரம் புலம்பெயர் தமிழர்களின்

    பணத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதை சிங்களவன் மறுக்கமுடியாது..

Leave a Reply

Previous post த.தே.கூ.வின் முஸ்லிம் உறுப்பினர்கள் கட்சி தாவத் தயார்: அமைச்சர் முரளிதரன்
Next post முரளி சுழலில் வீழ்ந்து நியூசி.. -202 ரன்களில் இலங்கை வெற்றி