By 24 August 2009 4 Comments

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-4)

aniindiaflag2.gifதேர்தலுக்கு முன்பு ‘முடிக்க’ விரும்பிய இந்தியா… பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழு கொழும்பு வந்து சேர்ந்தபோது பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இதுபோன்ற ஒரு பாதுகாப்பை நான் அதுவரை இலங்கையில் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு முற்றுகையில் இருந்தது இலங்கைத் தலைநகர். கிட்டத்தட்ட கொழும்பு நகரம் மூடப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலை காணப்பட்டது. பண்டாரநாயகே விமான நிலையத்திலிருந்து மாநாடு நடந்த இடத்திற்கு மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அனைத்து சாலைகளும் பல மணி நேரத்திற்கு மூடப்பட்டன. பாதுகாப்பு கெடு பிடி காரணமாக கொழும்பில் வசித்து வந்த பலர் வீடுகளை விட்டே வெளியேறியதும் எனக்கு நினைவில் உள்ளது. பிரச்சினை எதுவும் இல்லாமல் சார்க் மாநாடு முடிந்தது. இந்த பயணத்தின் போது இந்திய அதிகாரிகள், விடுதலைப் புலிகளுடனான போரின் நிலவரம் குறித்தும் முக்கியமாக ஆலோசித்தார்கள். இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, கடற்படைத் தளபதி கரன்னகோடா ஆகியோருடன் இந்தியக் குழு ரகசியமாக சந்தித்துப் பேசியது. இந்த சந்திப்பின்போது சீன மற்றும் பாகிஸ்தான் தலையீடுகள் குறித்து இந்தியத் தரப்பினர் கவலை தெரிவித்தனர். ஆனால் இந்தியா ஆயுத உதவிகளைச் செய்ய மறுத்ததால்தான் சீன, பாகிஸ்தான் உதவியை நாட நேரிட்டதாக இலங்கைத் தரப்பு கூறியபோது இந்தியாவால் அதற்குப் பதிலளிக்க முடியவில்லை என்று இலங்கை அதிகாரி ஒருவர் பின்னர் என்னிடம் தெரிவித்தார். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத இந்தியா, ராஜபக்சேவிடம் ஒரே ஒரு முக்கிய செய்தியை மட்டும் சற்று உறுதிபட தெரிவித்து விட்டு வந்தது. அது – 2009ல் நடைபெறவுள்ள இந்திய லோக்சபா தேர்தலுக்கு முன்பாக போரை முடித்து விடுங்கள் என்பதுதான்.

தேர்தலின் போது ஈழப் போரின் நிழல் விழுவதையும், அதனால் தங்களது வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படுவதையும் காங்கிரஸ் அரசு விரும்பவில்லை. மேலும், தேர்தல் நேரத்தில் போர் நீடித்துக் கொண்டிருந்தால் அது சரியாக இருக்காது, தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் அரசு பயந்தது.

இந்தியாவின் கவலையைப் புரிந்து கொண்டார் ராஜபக்சே. அதேசமயம், அவர் காலக்கெடு எதையும் நிர்ணயித்துக் கொள்ள விரும்பவில்லை. அதேசமயம், நடவடிக்கைளை விரைவுபடுத்துவதாக அவர் உறுதியளித்தார்.

இதையடுத்து மேனன், நாராயணன், விஜய் சிங் கோஷ்டியினர், பாதி கோரிக்கைள் நிறைவேறிய அரை குறை திருப்தியுடன் டெல்லி திரும்பினர்.
(இந்நூலில் வெளிவந்த செய்திகள் தொடரும்…)4 Comments on "விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-4)"

Trackback | Comments RSS Feed

 1. AMMAN says:

  ராஜபக்ச சகோதரர்கள் கொன்றுவிடுவது என்று முடிவு செய்தபின்பு அறநூறு வழக்கு என்ன ஆயிரம் வழக்கு கூட போடுங்கள். ஆனால் என்றாவது ராஜபக்ச சகோதரர்கள் மக்கள் முன்பு பதில் சொல்லும் காலம் வரும் அப்போது அவர்கள் எங்கு இருகிறிர்களோ தெரியாது. உலகத்திலே உள்ள குற்றங்களை கணக்கிட்டால் கூட எண்ணிக்கை அறுநூரை தாண்டாது. ஒரே விந்தையாக உள்ளது… இப்படியும் ஒரு மனிதனுக்கு குற்ற வழக்கில் தள்ள முடியுமா என்று. இதே பாணியை இனிமேல் நம் சிங்கள நாட்டு அரசியல்வாதிகள் கடைப்பிடிப்பார்கள் என்று நினைக்கிறேன்..ஒரு தனி நபர் மீது 600 குற்றச்சாட்டுகளா??? அப்படியென்றால் உங்கள் நாட்டில் எத்தனை விதமான குற்ற சட்டங்கள் உள்ளன xxx அனேகமாக குற்ற சட்டங்கள் அதிகமாக உள்ள நாடு ஸ்ரீலங்கா என கின்னஸ் புத்தகத்தில் எழுதலாம் போலுள்ளதே அடப்பாவிங்கள ஒரு முடிவு பண்ணிட்டிங்க இனி அவரை யார் காப்பாற்றுவது ? எதிரிகளை கண்டுகொள் .விழித்திடு தமிழ் மக்களே, விழித்திடு தமிழ் மக்களே,விழித்திடு தமிழ் மக்களே…3 லட்சம் மக்கள் முட்கம்பிவேலிக்குள், நிலத்தில் கால் வைக்கமுடியாத அளவு மழைநீர் வெள்ளத்தில் தத்தளிக்க, குடி நீருக்கு காத்திருக்க… Karuna மற்ற தண்ணியில் மிதந்துகொண்டுடிருக்கிறார்????

 2. Smart Thamilan says:

  பலி எடுக்கவும் பலி கொடுக்கவும் மட்டுமே தெரிந்த
  புலிகளின் விளக்கெண்ணை பினாமிகளுக்கு
  பள்ளிக்கூடம் பக்கமே போகாத கள்ளக்கடத்தல்காரரும்
  காசு அடிப்பதே தியானமாக இருப்பவனுமே
  தலைவனாக இருக்கமுடியும்

  கடைசியில் கோவணத்துடன்
  முழங்காலில் நின்று மண்டியிட்டு
  பிடரியில் கோடாலிக்கொத்து வாங்கத்தான்
  இந்த விளக்கெண்ணைகள் சரி

  ஒண்டும் விளங்காத விளக்கெண்ணை
  புலி புண்ணாக்குகளுக்கு தெரிந்ததெல்லாம்
  நீயும் ஒரு தமிழனா?
  உன் அம்மா தமிழா?
  என்று கேட்க மட்டும்தான்

  நாலு விஷயம் விளங்குகிற அளவுக்கு அறிவு இருந்தால்
  புலிவெறி இந்த புண்ணாக்குகளுக்கு வந்திருக்காதே

 3. george says:

  பக்கத்தில் படுத்தவனை
  படுகொலை செய்த பாதகனை
  கச்சை உரிந்து காட்சிப் பொருள்
  ஆக்கிப் போட்டாரே!
  வீதியில் டயர் மூட்டி விடலைகளை உயிரோடு
  வீசி எறிந்து எரித்தவனை
  விறகு வைத்து கொள்ளி வைத்து
  சிதைமூட்ட வழியின்றி போனானோ
  விலங்கிட்டு கூட்டடைத்து
  சித்திர வதை செய்து விசாரித்து
  வாய்க்குள் வைத்து போட்டவனை
  வாய்கரிசி போட வழியின்றி போனானே
  இம்மை வறுமையின்றி ஈன இரக்கமின்றி எண்ணுக்கணக்கின்றி
  எத்தனையோ பேரை போட்டுதள்ளியவனை
  ஒருதுளி கண்ணீர்விட ஒருத்தரின்றி போட்டானே
  கூக்குரலும் கண்ணீருமாய் கூடுகள் கலைத்தவனை
  சின்ன சிறார்களை சிதறப் பலி கொடுத்தவனை
  கோத்தபாயவினால் கோடாலி கொத்து வாங்கி
  கோவணத்தோடு போனானே

 4. Sivaji says:

  No comments. Kalam pathil sollum. Then only we will know who is the real smart Tamilan.

Post a Comment

Protected by WP Anti Spam