விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-7)

Read Time:1 Minute, 48 Second

ltte-slk-indiaஇந்தியாவின் குழப்பம்- சீனா, பாக்.கின் லாபம்… இதுகுறித்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் பின்னர் நான் ஒருமுறை பேசியபோது அவர் கூறினார் – முதலில் இந்தியாவிடம்தான் நாங்கள் ஆயுத உதவி கோரினோம். இந்தியா மறுத்த பின்னரே, பிற வாய்ப்புகளை நாங்கள் நாடினோம். முதலில் மேற்கத்திய நாடுகளை அணுகினோம். ஆனால் அவர்களின் ஆயுதங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. அதையும் மீறி அவர்களிடம் ஆயுதங்களை வாங்கினால் தொடர்ந்து தருவார்களா என்ற சந்தேகமும் இருந்தது. இதையடுத்து சீனாவிடம் திரும்பினோம். எங்களுக்கேற்ற விலையில் பெருமளவில் ஆயுதங்களைத் தர அவர்கள் தயாராக இருந்தனர். மேலும் ஐந்து வருட கடனுக்கு அவர்கள் ஆயுதங்களைக் கொடுக்க முன்வந்தனர். இதையடுத்து அவர்களிடம் கொள்முதல் செய்தோம். அதேசமயம், பாகிஸ்தானிடம் அவசரமாக தேவைப்பட்ட ஆயுதங்களை மட்டுமே கொள்முதல் செய்தோம் என்றார். இந்தியாவின் குழப்பத்தை சீனாவும், பாகிஸ்தானும் இப்படி சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டன. இதன் விளைவு இன்று இந்தியாவின் பின்புறம், சீனாவும், பாகிஸ்தானும் சத்தம் போடாமல் வந்து நின்று விட்டன என்று தனது நூலில் எழுதியுள்ளார் கோகலே.!!!!!! முற்றும்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-7)

  1. New Indian Foreign Minister S.M. Krishna and his Secretary will also join the earlier Kerala Terrorists who has ruined the future for Tamils in Sri Lanka or will act with sense and bring Proud to India at least now?

Leave a Reply

Previous post கல்முனைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலின்போது புலி உறுப்பினர்கள் இருவர் கொலை
Next post ரஷ்ய காதலியை மணக்கிறார் மார்ட்டினா நவ்ரத்திலோவா!