கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் சரியான தகவல்களை வழங்கினால் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதி

Read Time:2 Minute, 37 Second

வவுனியா முகாம்களில் தங்கியிருப்பவர்களுள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் தங்கள் தொடர்பான சரியான தகவல்களை வழங்கி அவற்றை உறுதிப்படுத்துவார்களாயின் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில் தற்போது முகாம்களில் உள்ளவர்களுள் 60வயதிற்கு மேற்பட்டோர் விரும்பினால் தமது உறவினர்கள் தொடர்பான சரியான விபரங்களை வழங்குவார்களேயானால் அந்த தகவல்கள் பாதுகாப்பு தரப்பினர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்போம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் தாங்கள் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவார்களானால் அதனை அப்பகுதியை சேர்ந்த அரசாங்க அதிபரிடம் அல்லது கிராமசேவகரிடம் ஒப்படைத்து இவர்களது பதிவுத் தகவல்களை உறுதிசெய்யப்பட்டபின்னர் அவர்களை அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பிவைப்போம் அதுதொடர்பான வேலைகள் தற்போது நாம் மேற்கொண்டு வருகிறோம். ஆத்துடன் 35 கிராமங்களில் மீள் குடியேற்றத்திற்கான நடவடிக்கைககள் இடம்பெற்று வருகின்றன கண்ணிவெடிகள் அகற்றப்படாத பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் குடியேற்ற வேலைகள் இடம்பெற்று வருவதுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளும் இடம்பெறுகின்றன தத்தமது பிரதேசங்களில் சென்று வசிப்பதில் மக்கள் ஆர்வமாகவே உள்ளனர் இவற்றில் பாதுகாப்பு தரப்பினரை நாடி நாங்கள் பேசியுள்ளோம் எனவே அனைவரினதும் ஒத்துழைப்புடனும் விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வன்னி மோதலுக்கு ஆயுதம் வழங்க மறுத்த பிரிட்டிஸ்
Next post ஜனாதிபதியால் மாத்திரமே பொதுமன்னிப்பு வழங்க முடியும் -பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி