வன்னியில் பணியாற்றி கைது செய்யப்பட்ட அரச வைத்தியர்கள் பிணையில் செல்ல அனுமதி

Read Time:2 Minute, 58 Second

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்;ட வன்னியில் பணியாற்றிய வைத்திய அதிகாரி சி.சத்தியமூர்த்தி மற்றும் சண்முகராஜா உள்ளிட்ட மருத்துவ தரப்பினர் நால்வரையும் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் சிசாந்த கப்பு ஆராச்சி நேற்று உத்தரவிட்டார். நால்வரையும் 10 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிராதான நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார் கிளிநொச்சி வைத்திய அதிகாரி சி.சத்தியமூர்த்தி முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி டி.பிசன்முகராஜா இளஞ்செழியன் பல்லவன் கிருஷ்ணராஜா வரதராஜா ஆகியோரை இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் இரகசிய பொலிஸாரின் ஒப்புதலுக்கு அமைவாகவே இந்தப் பிணை வழங்கப்பட்டுள்ளது. வவுனியாவில் மட்டும் தங்கியிருக்க வேண்டும் அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரகசியப் பொலிஸாரிடம் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இவர்கள் நால்வருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் சட்டப்படி இந்த நால்வரும் வேறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்பதை கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். வன்னி யுத்தத்தின் போது பொதுமக்களின் இழப்புகள் குறித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு தவறான தகவல் கொடுத்தனர் என்பதே இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும் எனினும் கைது செய்யப்பட்டு ஒருமாத காலப்பகுதியில் இவர்கள் தாம் வன்னிப் பகுதியிலிருந்து கொடுத்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாகவே இவ்வாறு செய்திகளை வெளியிட்டதாகவும் அரச ஊடக மத்திய நிலையத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் புலிகளுக்குச் சொந்தமான 10சிறியரக விமானங்கள் உள்ளன -சிங்களப் பத்திரிகை
Next post நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை