நாம் இழந்ததை இழக்கப்பட்டதை மீண்டும் பெற்றுக் கொள்வதே உண்மையான வெற்றி -பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!

Read Time:3 Minute, 0 Second

விடுதலைப்புலிப் பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்தது மட்டுமே எமக்கு கிடைத்த உண்மையான வெற்றி என நாம் நினைத்துவிடக் கூடாது நாம் இழந்ததை இழக்கப்பட்டதை மீ;ண்டும் பெற்றுக் கொள்வது உண்மையான வெற்றியாகும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் முடிவும் சமாதானத்தின் உதயமும் எம்மத்தியில் சுலபமான எண்ணங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பிஸ்னஸ் டுடே சஞ்சிகை கொழும்பில் நடத்திய பிஸ்னஸ் டுடே டொப் டென் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னரான சமாதானத்தை பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்ப நாமனைவரும் அர்ப்பணி;ப்புடன் செயலாற்ற வேண்டும் தம்மை பற்றி சிந்திப்பதற்கு முன்பாக நாட்டை பற்றி சிந்திக்கவேண்டும் அப்போதுதான் நாட்டு;க்கான எமது கடமையை செவ்வனே நிறைவேற்ற முடியும் முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து நிலையான இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தால் எமது நாட்டில் வர்த்தகம் வீழ்ச்சியடைந்து வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டார்கள் இதனல் எமது தொழிற்துறைகளில் அபிவிருத்தியை காண முடியவில்லை புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். எனவே அவர்களால் கிடைக்க வேண்டிய நன்மைகள் பங்களிப்புகள் கிடைக்காமல் போயின. எமது சமூக வியூகம் மாற்றமடைந்து நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் நின்றுபோய் வன்முறைக் கலாச்சாரம் பயங்கரவாதத்தால் எமது நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது எனவே நாம் இழந்ததை இழக்கப்பட்டதை மீண்டும் பெற்றுக் கொள்ளும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் இதுவே உண்மையான வெற்றியாகும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-6)
Next post 11மாதங்கள் நிரம்பிய குழந்தையை 50ஆயிரம் ரூபாவுக்கு விற்கமுற்பட்ட தாய் உள்ளிட்ட மூவர் கைது!!