தமிழர் பிரச்சினை குறித்து பராக் ஒபாமா அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிக்காகோ கல்லூரி மாணவர்கள் மூவர் நீண்ட நடைப்பயணம்

Read Time:1 Minute, 34 Second

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பராக் ஒபாமா அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மூவர் நீண்ட நடைப்பயணப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சிக்காகோ நகரத்திலிருந்து வாஷிங்ரன் நகரம்வரை நீண்ட நடைப்பயணம் ஒன்றை மேற்கொள்வதன் மூலம் இலங்கையின் சிவில் யுத்தத்தில் அப்பாவித் தமிழர்கள் 85ஆயிரம் பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டிருப்பதை பராக் ஒபாமா அரசின் மேலான கவனத்துக்கு கொண்டுவர நாங்கள் முயற்சிக்கின்றோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த நடைப்பயணத்துக்கு மௌனத்தைக் கலைப்போம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சிக்காகோ நகரத்திலிருந்து வாஷிங்ரன் நகரமவரை கால்நடையாக செல்வதற்கு சுமார் 70 நாள்கள் எடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த 70நாள் கால்நடைப் பயணத்தின் பயனாக ஒபாமா அரசின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு விமோசனமும், நிவாரணமும் கிடைக்கும் என்றும் தாங்கள் நம்புகின்றனர் என்று கல்லூரி மாணவர்கள் மூவரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களுபோவில வைத்தியசாலையில் உடல்எடையைக் குறைக்க சிகிச்சை பெற்ற யுவதி உயிரிழப்பு!
Next post திருமலையில் விவசாயம் மேற்கொள்ளப்படாதிருந்த பத்தாயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கை