கொழும்பில் மூவர் கடனட்டை மோசடி தொடர்பில் கைது

Read Time:2 Minute, 0 Second

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று ஒழுங்கமைக்கப்பட்ட கடனட்டை மோசடிக்குழுவைச் சேர்ந்த 3பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அவர்கள் சுமார் 800 கடனட்டைகளை பயன்படுத்தி 100 மில்லியன் பெறுமதியில் பணம் மற்றும் பொருட்களையும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது அவர்கள் இந்த போலி கடனட்டைகளை தயாரிப்பதற்கு தனியான அச்சு இயந்;திரம் ஒன்றை பயன்படுத்தி அந்த கடனட்டைகள் ஊடாக குறிப்பிட்ட தொகையிலான பொருள் கொள்வனவுகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவே தென்னாசிய பிராந்தியத்தில் இடம்பெற்ற மிகப்பாரிய கடனட்டை மோசடி என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த கடன் அட்டைகளை அச்சிடும் பணிகள் வெள்ளவத்தை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. அவர்கள் வெளிநாடுகளில் ஏ.டி.எம் இயந்திரங்களின் ஊடாக வங்கிகளில் இருந்து பணத்தையும் பெற்று வந்துள்ளனர் இந்த நிலையில் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு உதவினார்களா? என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ஏற்கனவே அவர்கள் மூவரும் விடுதலைப்புலிகளுக்கு உதவியர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2008 வருடாந்த அறிக்கையின்படி பொலிஸாருக்கு எதிராக 1380 முறைப்பாடுகள் -பொலிஸ் ஆணைக்குழு தெரிவிப்பு
Next post வவுனியா நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மதகுமார் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு