By 27 August 2009 8 Comments

இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்யும் காட்சிகள் வெளியீடு!

இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்யும் காட்சிகளை பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. இந்த இளைஞர்கள் இலங்கை இராணுவத்தினரிடம் சிக்கிய விடுதலைப் புலிகள் என நம்பப்படுகிறது. இந்த விடியோ காட்சியில் சில இளைஞர்கள் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் தரையில் கிடத்தப்பட்டுகின்றனர். பின்னர் இராணுவ வீரர்கள் அவர்களை உதைத்து, துப்பாக்கியால் சுட்டுச் கொலை செய்கின்றனர். இந்த விடியோ காட்சி இலங்கை இராணுவவீரர் ஒருவரிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த விடியோ காட்சிகள் போலியானவை என்று இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.8 Comments on "இலங்கை இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்யும் காட்சிகள் வெளியீடு!"

Trackback | Comments RSS Feed

 1. george says:

  Please watch again, the 2nd Man killed is none other than PLOTE’s Senior Leader Farook Annai who was under arrest by LTTE!

  Dear Readers, kindly recall that in Jan 09 when LTTE started to vacate their torture camps in Thunnukai they massacred a lot of Tamil youths who were in their custody.

 2. Paarthipan says:

  எழுபது வருடமாக சிங்கள எதிர்ப்பு பேசி அரசியல் செய்த தமிழ் தலைவர்கள் தமிழரை ஏமாற்றினார்கள்.

  கிணத்தடியில் குளித்துக்கொண்டிருந்த என் மகளை உடுத்த உடுப்போடு கடத்தி களத்தில் பலி கொடுத்தனர் பிள்ளைபிடிகார புலிகள்.

  சில மாதங்களின் முனபும் வவுனியாவில் ஒரு இராணுவத்தளபதியின் வீட்டிற்பகுச் சென்ற பாதிரியார் கண்ட காட்சிகள் என்று சில அறுக்கப்பட்ட உடல்களின் படங்களையும் போட்டு பரபரப்பான செய்தியாக்கினார்கள் சில புலிப்பினாமிகள். ஆனால் அவையனைத்தும் இந்தியாவில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்ட சில உடல்கள் என்பதை அந்த படங்கள் வந்த இந்திய இணையத்தளமொன்றின் இணைப்பையும் இணைத்து புலிப்பினாமிகளின் மோசடிகளை பின்பு சிலர் அம்பலப்படுத்தினார்கள்.

  தொடர்ந்து புலிகளும் புலிப்பினாமிகளும் தமது பரப்புரைகளுக்காக மோசடியாக செய்த பல அம்பலமானாதால், இந்த ஒளிப்பதிவையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க வேண்டியுள்ளது.

  புலிகள் பல காட்சிகளை எப்படி எடுத்தார்கள் என்பதை முன்பே ஆதாரத்தோடு வெளி வந்திருந்தன.உதாரணமாக குண்டு வீச்சின் போது சனங்கள் ஓடுவது, பின்பு பதுங்குழியில் பதுங்குவது உட்பட சக போராளிப் பெண்களின் உயிரற்ற உடலையே நிர்வாணமாக்கி இலங்கை இராணுவம் அப்படிச் செய்ததாக பரப்புரையை மேற்கொண்டது வரை. ஆனால் நிர்வாண உடல்களைச் சுற்றி நின்ற புலிகளின் சாதாரண களிசானும் பாட்டா சிலிப்பரும் அவர்கள் யார் என்று காட்டிக் கொடுத்து அவர்களை அம்பலப்படுத்தியது.

  புலிகளின் அடாவடித்தனங்கள் பற்றிய புலிகளால் பாதிக்கப்பட்ட முன்னாள் பல்கலைக்கழக மாணவரொருவரின் நேரடி வாக்குமூலம், பல்கலைக்கழகத்திலேயே அன்று கொடுக்கப்பட்டது.
  http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3847:rayakaran11&catid=193:speech-srilanka&Itemid=111

 3. Canadian says:

  This is very suspicion why nitharsanam.net publishing this news the second time with a different opinion. Hope you guys not bought by the Sri Lankan government. Also both comments just 5 minutes apart after the original mail posted.

  Again you never published my previous comment for the same topic and you have the right to publish or remove my comment. But God is watching you guys !!!

 4. AMMAN says:

  ராஜபக்ஷே இதை எல்லாம் பார்க்கும் போது ஸ்ரீலங்கா ஒரு தீவிரவாத நாடு போலவும் சிங்களர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றே எண்ண தூண்டுகிறது…….. இது உண்மை என்றே நினைக்கிறன் …. இதை அணைத்து நாடுகளும் உணர்ந்து ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பது உலக நாடுகளில் வாழும் அணைத்து மக்களின் உணர்வு! ப கி மூன் என்ன செய்கிறார்?. எந்த உயிரையும் இது போல் கொல்வது மிகவும் வருத்தமான செயல். அதே போல் விடுலை போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்றதையும் நாம் கண்டிக்க வேண்டும், நோக்கம் எவ்வளவு உயர்வாக இருந்தாலும் செயல்பாடு தவறாக இருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டும். இறுதியல் இன்று துன்பத்தில் சிக்கி இருப்பது அப்பாவி இலகைத்தமிழர்கள் தான்..கலைஞரே !!!பாரும் என் இன மக்கள் ….மிருகங்களால் சுட்டு கொல்லப் படுவதை !!!! இநத காட்சியை உங்கள் வீட்டில் பார்த்து ரசியுங்கள்… இனி துரோகியை “எட்டப்பன்” என்று சொல்வதை விடுத்து “கருணா” என்று சொல்லுங்கள். இந்த சொல் இந்திய கருணாவுக்கும் பொருந்தும் ஈழ கருணாவிற்கும் 100% பொருந்தும் … உலகத்தின் நரகம் ஸ்ரீ லங்க …ராவணனை கொல்ல ராமன் வந்தான் ,ராஜபக்ஷேவெய் கொல்ல யார் வருவார் ? எட்டப்பன் கருணா வருவார்ராஜபக்ஷே நீ பதில் சொல்லயே ஆகா வேண்டும்???

 5. ரகுமான் ஜான் says:

  புலிகள் தாடி வைப்பதில்லை எனவே வீடியோவில் கொல்லப்படுவது புலிகள் அல்ல.
  சம்பவம் நடந்த இடம் துணுக்காய். துணுக்காய் மல்லாவி வாசிகளுக்கு நன்கு தெரிந்த இடம். கொலை செய்பவரின் தலைமயிர் அவர் இராணுவத்தை சேர்ந்தவரல்ல என்பதை தெளிவாகிறது..
  இரண்டாவதாக கொலை செய்யப்படுபவர் புளட்டை சேர்ந்த புலிகளால் பிடிக்கப்பட்டிருந்த பாரூக் என்பதை பாரூக்கை தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும்.

  துணுக்காய் வதை முகாமில் புலிகளின் பிடியில் இருந்த அத்தனை மாற்று இயக்க மாற்று கருத்து கொண்ட அனைவரும் கடந்த ஜனவரியில் துனுக்காயை விட்டு புலிகள் பின் வாங்கும் பொது சுட்டு கொல்லப்பட்டது அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம்

 6. Shri & Mano says:

  இலங்கையரசு இன்றும் இறைமையுள்ள அரசு!.

  புலிகள் அப்படியல்ல!!

  புலிகள் சொந்த மக்களையே பலி கொடுத்து பலி எடுத்து பணம் சேர்த்தவர்கள்!!!

  புலிகள் சர்வதேசிய ரீதியில் பயங்கரவாதிகள் என்று பட்டம் எடுத்தவர்கள்!!!

 7. Canadian says:

  Farrok was an older guy and the guy got killed was in 20s. Farook reunited with his family and came on the Tamil news paper while having a cup of coffe and reading a newspaper.See the actual photo……

  http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18208

 8. நக்கீரன் says:

  வேதனைக்குரிய வீடியோ..
  கொல்லப்படுவது மாற்று இயக்கத்தினர் என்றும் கொலை செய்வது புலிகள் என்றும் இந்த வீடியோ வை பார்க்கும் போது அப்பட்டமாக தெரிகிறது..

  யாரோ……

  இறப்பது தமிழர் என்பது மட்டும் உண்மை…

Post a Comment

Protected by WP Anti Spam