வணங்காமண் நிவாரணம் கடலில் கொட்டப்படும் அபாயம்.. வெளியகற்ற மீண்டும் புதிய தடங்கல் -செஞ்சிலுவை சங்க பிரதி பணிப்பாளர் நாயகம்

Read Time:3 Minute, 11 Second

கொழும்பு துறைமுகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தேங்கிக் கிடக்கும் வணங்காமண் நிவாரணம் காலாவதியாகியோ அல்லது பழுதடைந்தோ கடலில் கொட்டப்படும் அபாயம் தோன்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கையில் கொலராடோ கப்பலில் எடுத்துவரப்பட்;ட நிவாரணப் பொருட்கள் அங்கிருந்து வெளியகற்றுவதற்கான சகலவித அனுமதிகளையும் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் துறைமுக அதிகார சபைக்கு 6.5 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதால் நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதால் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்துள்ளார் இத்தொகையை அரசாங்கம் செலுத்துவதற்கு முன்வரும் என தாம் நம்புவதாக தெரிவித்த அவர் இன்றைய தினத்திற்குள் அதற்கான இணக்கம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நிவாரணப் பொருட்களை வவுனியாவிற்கு கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்டார் இந்நடவடிக்கை குறித்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மேலும் தகவல் தருகையில் நிவாரணப் பொருட்கள் 27 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் பொழும்பு துறைமுகத்தில் சுமார் ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன எனவே இந்தப் பொருட்களில் சில காலாவதியாகி இருக்கக்கூடும் அல்லது பழுதடைந்திருக்கக் கூடும் என கருதப்படுகின்ற போதிலும் அதனை உறுதிப்படுத்த எம்மால் முடியவில்லை இவற்றை வவுனியாவிற்கு கொண்டு சென்று வினியோகிக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்ட போதிலும் புதிய புதிய தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன இப்போது நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்று விநியோகிப்பதற்கான சகலவிதமான அங்கிகாரங்களையும் நாம் பெற்றுக் கொண்டுள்ளோம் ஆயினும் கொலராடோ கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றமைக்கான தாமதக் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் தோன்றியுள்ளது. என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய முகவர் அமைப்பு விரைவில் பிரபாகரன் குறித்த விசாரணைக்காக இலங்கை விஜயம்!
Next post போலி விமான டிக்கெட்மூலம் இலங்கைக்குச் செல்ல முயற்சித்த இரு வியாபாரிகள் கைது!!