நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் இழந்து விட்டது!

Read Time:1 Minute, 40 Second

நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் தாம் இழந்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வுமையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் கலத்தில் இருந்து வந்துகொண்டிருந்த சமிஞ்சைகள் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் முழுமையாக நின்றுவிட்டதாகவும், தொடர்புகளை ஏற்படுத்த செய்யப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. கலன்செயல் இழந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்படுவதாக இந்த திட்டத்தின் இயக்குனர் அண்ணாதுரை ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் அக்டோபர் 22ம் திகதி சென்னைக்கு வடக்கேயுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் கடந்த நவம்பர் மாதத்திலும் பின்னர் இவ்வருடம் ஜூன் மாதத்திலும் பல சிக்கல்களை சந்தித்திருந்தது. சந்திரயான் பயணத்தின் அறிவியல் நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாகவும், தாங்கள் பெற எண்ணிய தரவுகளில்ள் 95 சதவீதம் வரையிலானவை கிடைத்துவிட்டதாகவும் திட்ட இயக்குனர் அண்ணாதுரை ஊடகத்திடம் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 52 இலங்கையர்கள் என சந்தேகிக்கப்படுவோர் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைது!
Next post நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுமி தன்னந்தனியாக உலகை சுற்றிவர திட்டம்..!