பார்முலா ஒன் வரலாற்றில் முத்திரை பதித்தது இந்தியா

Read Time:2 Minute, 48 Second

பார்முலா ஒன் மோட்டார் பந்தய வரலாற்றில் இந்தியாவின் போர்ஸ் இந்தியா அணி முதன் முறையாக புள்ளிகள் பெற்று வரலாறு படைத்துள்ளது. போர்ஸ் இந்தியா டிரைவர் கியான்கார்லோ பிஸ்செல்லா இரண்டாவது இடம்பிடித்து 8 புள்ளிகள் பெற்றார். தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2007ம் ஆண்டு போர்ஸ் இந்தியா என்ற பார்முலா ஒன் அணியை உருவாக்கினார். இதை தொடர்ந்து இந்தியாவில் மோட்டார் பந்தய போட்டிகள் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. வரும் 2011ல் தலைநகர் டெல்லியில் இந்தியன் கிராண்ட் பிரி தொடரை நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் முறையாக பார்முலா ஒன் தொடரில் பங்கேற்ற இந்திய அணி ஒரு புள்ளிகள் கூட பெறாமல் கடைசி இடத்தை பிடித்தது. நேற்று இந்த ஆண்டுக்கான பெல்ஜியன் கிராண்ட்பிரி பந்தயம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக பங்கேற்ற டிரைவர் கியான்கார்லோ பிஸ்செல்லா இரண்டாவது இடம் பிடித்தார். அவருக்கு 8 புள்ளிகள் கிடைத்தது. இதையடுத்து போர்ஸ் இந்தியா அணி கிராண்ட்பிரி பார்முலா ஒன் வரலாற்றில் முதல் புள்ளியை பெற்று புதிய சாதனை படைத்தது. இரண்டாவது இடம் பிடித்ததை அடுத்து அடுத்தாண்டு போர்ஸ் இந்தியா அணிக்கான பயண செலவுகளை போட்டி நிர்வாகமே செய்துவிடும். இதையடுத்து போட்டியின் ஒவ்வொரு சுற்றுக்கும் ரூ. 65 ஆயிரம் செலுத்தி வந்த விஜய் மல்லையாவுக்கு லட்சக்கணக்கில் பணம் மிச்சமாகும். தற்போது இந்திய அணி 8 புள்ளிகள் பெற்றதை அடுத்து அவர்கள் இந்த ஆண்டு நி்ச்சயம் கடைசி இடம் பிடிக்க மாட்டார்கள். இதையடுத்து டிவி ஒளிப்பரப்பு உரிமையில் போர்ஸ் இந்தியா அணிக்கு ஒரு பங்கு கொடுக்கப்படும் எனவும் தெரிகிறது. மேலும், பிஸ்சில்லாவுக்கு ஒரு புள்ளிக்கு ரூ. 12.5 லட்சம் வீதம், 8 புள்ளிக்கு சுமார் ரூ. 1 கோடி கிடைக்கும் வரை என தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிவாரணக்கிராமங்களுக்கு மீளவும் திரும்பிய அருட்சகோதரிகள்
Next post சரிகாவை கமல் திருமணம் செய்தது ஏன்?