பௌத்தலோகா மாவத்தையில் மரணமான மலையக யுவதிகளின் வழக்கில் வீட்டு உரிமையாளர் ஒருவர் கைது
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள கால்வாய் ஒன்றுக்குள் இருந்து சடலமாக கைப்பற்றப்பட்ட நுவரெலியா மாவட்டம் மஸ்கெலிய முள்ளுக்காமம் கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றது. சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நீதிமன்றில் இதற்கான வழக்கினை தாக்கல் செய்திருந்தது. உயிரிழந்த சுமதி, ஜீவராணி ஆகிய இரு சிறுமிகளில் ஜீவராணி பணிபுரிந்த பௌத்தலோகா மாவத்தைப் பிரதேச வீட்டைச் சேர்ந்தவரான உதுமா லெப்பை முகமட் தௌபீக் என்பவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவரை எதிர்வரும் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.