பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் நெஞ்சுவலியால் மரணம்..

Read Time:2 Minute, 9 Second

பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முந்தினம் சனிக்கிழமை பலாங்கொடையில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ரத்மலவின்ன மகாவித்தியாலயத்தில் பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டிருந்த ஏ.எம்.ஏ. அழகியவன்ன என்ற அதிபரே (வயது-49) என்பவரே உயிரிழந்தவராவார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, க.பொ.த (உயர்தரம்) பரீட்சையின் 17 ஆம் நாளான நேற்று முந்தினம் காலை 8.30 மணிக்கு சாதரண பொதுஅறிவுப்பாடம் ஆரம்பமாகியிருந்தது. பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் தனக்கு இலேசாக நெஞ்சுவலி இருப்பதாக சக ஆசிரியர்களிடம் கூறிய மேற்பார்வையாளர் பரீட்சாத்திகளுக்கு அவசியமான அறிவுறுத்தல்களை வளங்கிவிட்டு, வினாப்பத்திரங்களையும் வழங்கிவைத்துள்ளார். தொடர்ந்தும் அவருக்கு நெஞ்சுவலி அதிகரிக்கவே அவர் சக ஆசிரியர்கள் சிலரினால் வைத்திசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்களின் தீவிர சிகிச்சைகளுக்கு மத்தியிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேற்பார்வையாளர் பலாங்கொடை மகவெலதென்ன வித்தியாலயத்தின் அதிபர் என்றும் ஒரு குழந்தையின் தந்தையென்றும் தெரியவருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பால் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடை செய்யவே புதிய சட்டங்கள்..
Next post அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரை நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிப்பு..