கெப்டன் அலி (வணங்கா மண்) கொலராடோ கப்பலில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் நலன்புரி நிலைய மக்களுக்கு கிடைக்குமா என சந்தேகம்?!

Read Time:3 Minute, 52 Second

போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளான வன்னிமக்களுக்கு, ஐரோப்பாவாழ் புலம்பெயர்ந்த தமிழ்மக்களால் வணங்கா மண் (கப்டன் அலி) கப்பல்மூலம் அனுப்பப்பட்ட உணவு மற்றும் மருந்து நிவாரணப் பொருள்கள் அவர்களின் கைக்கு எட்டுமா என்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது. மாதங்கள் ஆறு தாண்டியும் ஐரோப்பிய தமிழ்மக்கள் அனுப்பிய பொருள்கள், மனிதபாவனைக்கு உகந்தவையா என்ற பரிசோதனைத் தடை தாண்டி அகதிமுகாம்களில் வாழும் மக்களுக்குக் கிடைக்குமா என்பது நிச்சயமற்றதாகி வருவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வன்னிக்கென கெப்டன்அலி கப்பலில் ஏற்றிவந்த உணவு மற்றும் மருந்துப் பொருள்கள், பலதடைகள், வீம்புத்தனங்களால் சென்னைக்குச் சென்று கொலரடோ கப்பலுக்கு மாற்றப்பட்டு பல தடங்கல்களின் பின்னர் ஜூலைமாதத்தில் கொழும்பு வந்துசேர்ந்தது. உணவுப் பொருள்களும்சரி மருந்துப் பொருள்களும்சரி மக்கள் பாவனைக்கு உகந்தவையா என்பது குறித்த பரிசோதனைகள் சாதகமாக இருந்தால் மட்டுமே அவற்றை அகதிகளுக்கு விநியோகிக்க முடியும் என்று நிவாரணப் பொருள்களை இப்போது பொறுப்பேற்றுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலரடோ கப்பலிலுள்ள உணவுப் பொருள்கள் கடந்த ஜூலை 31ம் திகதிமுதல் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கின்றன. இந்த உணவுப்பொருள்களில் தகரங்களில் அடைக்கப்பட்ட உணவுகளான பால் வகைகள், பிஸ்கட்டுகள், பழச்சாறுகள் ஆகியனவும் இருக்கின்றன. எனவே, இந்த உணவுப் பொருள்கள் தற்போது பாவனைக்கு உகந்தநிலையில் இருக்கின்றனவா அல்லது பழுதடைந்துவிட்டனவா என்று பரிசோதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உணவுப்பொருள்களின் மாதிரிகள் இலங்கை தரப்பரிசோதனை நிறுவனத்தினால் பரிசோதனைகளுக்காகப் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. பரிசோதனைகள் சாதகமாக அமைந்தால் உணவுப்பொருள்களை இயலுமான விரைவில் வன்னிமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு விநியோகிப்பதே இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது. இதேநேரம், கப்டன்அலியில் கொண்டுவரப்பட்டிருக்கும் மருந்துப்பொருள்களும் தற்போது பாவனைக்கு உகந்த நிலையில் இருக்கின்றனவா அல்லது பழுதடைந்து விட்டனவா என்பது குறித்து இலங்கை சுகாதாரஅமைச்சு பரிசோதனைகளை நடத்தி முடிவை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அறிவிக்கும். பரிசோதனைகளின் முடிவைக் கருத்தில்கொண்டே மருந்துப்பொருள்களும் அகதி மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இராணுவ அதிகாரசபையின் தலைவராக நியமனம்!
Next post பிலியந்தலையில் வைத்து காணாமற்போய் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது வயதுச் சிறுவன்