By 4 September 2009 1 Comments

தெரிந்தோ தெரியாமலோ இலங்கைக்கு உதவிகளை செய்து இந்தியா தன்தலையில் தானே மிளகாய் தடவிக் கொண்டது -வீரமணி

தெரிந்தோ தெரியாமலோ இலங்கைக்கு உதவிகளைசெய்து தன்தலையில் தானே மிளகாய் தடவிக் கொண்டது இந்தியா. இலங்கை பிரச்சினை தொடர்பில் முதல்வர் கருணாநிதிமீது தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றஞ்சாட்டுவதை நிறுத்தவேண்டும் இவ்வாறு பெரியார் திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இலங்கையில் முள்வேலிகளுக்குள் சிக்கியிருக்கும் தமிழர்களை காக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நேற்று சென்னை வேப்பேரி பெரியாரதிடலில் ரயில்மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கியுள்ளார். பேரணி மற்றும் மறியல்போராட்டத்தை ஆரம்பித்து வைத்து கி.வீரமணி பேசுகையில், தமிழர்கள் எங்களுக்கு விரோதியில்லை. தீவிரவாதத்தை ஒடுக்குவது தான் எங்கள் நோக்கம் என இலங்கை அரசு கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது. இதை நம்பி இந்தியாவும் இலங்கைக்குத் தேவையான உதவிகளை தெரிந்தோ, தெரியாமலோ செய்து தன்தலையில் தானே மிளகாய்தூளை தூவிக்கொண்டது. மத்தியஅரசு இலங்கை பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறது. இனியும் இந்நிலை தொடர்ந்தால் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் ஒன்றுகூடி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். சர்வதேச குற்றவாளிகளில் முதலமைச்சர் கருணாநிதிக்கு முதல்இடம் என்றும், பிரதமருக்கு இரண்டாம் இடம் என்றும், அவர் தமிழின துரோகி என்றும் இங்குள்ள சிலர் பேசிவருகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களை துரோகிகளாக மாற்றாதீர்கள். மீண்டும் இராமாயணத்தை உருவாக்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.1 Comment on "தெரிந்தோ தெரியாமலோ இலங்கைக்கு உதவிகளை செய்து இந்தியா தன்தலையில் தானே மிளகாய் தடவிக் கொண்டது -வீரமணி"

Trackback | Comments RSS Feed

 1. தனஞ்சேயன் says:

  பிரபாகரனும் அவரின் சகாக்களும் புதுமத்தாளன் பகுதிக்குள் மக்களுக்குள் பதுங்கியிருந்த வேளை தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடு பிடித்து இருந்தன. இலங்கை தமிழர்களின் அவலை நிலமையினை அனைத்து கட்சிகளும் தமது பிரச்சாரங்களுக்கு பாவித்து இருந்தன. அப்போது மிகவும் வல்லமை பொருந்திய நாடு ஒன்றின் உதவியுடன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொடியுடன் வெளிநாடு ஒன்றிற்கு புலிகளின் தலைவரை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஒருவர் மேற்கொண்டு வருவதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாக்கி இருந்தது.

  மும்பாய் தாக்குதலுக்கு பின்னர் புதிய அமைச்சு பொறுப்பினை ஏற்று இருந்த இந்த அமைச்சர், ஐயிரோப்பிய சமாதான தூதுவருடனும் அமரிக்காவுடனும் இது குறித்து பேசியதாகவும் பத்திரிகையில் செய்தி வந்து இருந்தது. இந்த அமைச்சர் இவ்வகையான ஒரு ஏற்பாட்டினை மேற்கொண்டுவிட்டால்! அதன் மூலம் கிடைக்கும் பலன் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உதவிவிடும், என்று நினைத்த தமிழக தலைவர்கள் மூவர், தாமே பிரபாகனை காப்பாற்றுவதற்கான ஒரு திட்டத்தினை வகுத்த தோடு, காங்கிரஸ் அமைச்சரை நம்ப வேண்டாம் என பிரபாகரனுக்கு தகவல் அனுப்பியிருந்தார்கள். அத்துடன் இந்திய தேர்தல் முடிவுகள் வரும் வரையில் அவசரப்படவேண்டாம் என்றும் அறிவுரைகள் வழங்கியிருந்தார்கள்.

  அம்மா 40 இடங்களை கைப்பற்றுவா, அதன் பின்னர் மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சியினை அம்மா ஆட்டி படைக்கலாம் என்றும், அம்மாவின் மூலம் மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து பிரபாகரனை காப்பாற்றலாம் என்றும் அந்த மூன்று தலைவர்களும் புலிகளின் வெளிநாட்டு தலைவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து இருந்தார்கள். அதேவேளை இந்த முறை தலப்பாக்காரன் (மன்மோகன் சிங்) வீட்டுக்குதான் போவார் எனவும், ஜெயலலிதாவும், வை. கோவும் தமிழ் ஈழம் பெற்று தருவார் எனவும் புலம் பெயர்ந்து வாழும் புலிகள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். புலி ஆதரவாளர்களின் ஆய்வுகளும், சிந்தனைகளும் பல வேளைகளில் விசித்திரமாகவே இருக்கும். “தாயகம்” ஆசிரியரின் மொழியில் கூறுவதனால், சுய இன்பம் காணுவதில் இவர்கள் மிகவும் களிப்பு கொள்பவர்கள்.

  புலிகளின் தலைவரை காப்பாற்றுவதன் மூலம் கிடைக்கும் பெருமை, புகழ், வாக்குகள் ஆகியன வற்றை கொண்டு காங்கிரங் கட்சி வென்று விடக்கூடாது என்பதில், கோமாளி வையாபுரி, பிரபல மன்னர் ஒருவரின் பெயருடைய இடதுசாரி கட்சியின் தலைவர் ஒருவர், படகு புகழ் உயர் மாறன் ஆகிய மூன்று தலைவர்களும் குறியாக இருந்தனர். மேலும் புலிகள் குறித்தும், ஈழ தமிழர்கள் குறித்தும் தமிழகத்தில் பேசும் உரிமையை கொந்தராத்து எடுத்து கொண்டவர்கள் போலவே இவர்கள் கடந்தகாலங்களில் நடந்து கொண்டிருந்தார்கள். இந்திய தேர்தல் முடிவடைந்ததும், அம்மாவின் ஆதரவினை கொண்டு புலி தலைவரை காப்பாற்றுவது என்று மூன்று தலைவர்களும் திட்டமிட்ட அதேவேளை, இதற்கு ஆதரவாக புலிகளின் ஆதரவு இணையதளமன தமிழ் நெற் இணைய தளத்தின் நிருபர்களில் ஒருவர் நோர்வே நாட்டில் இருந்து தானும் இதற்கு உதவுவதாகவும், சாமாதான தூதுவரும் உதவுவார் எனவும் கூறியிருந்தார்.

  இதனை மலைபோல நம்பிய புலிகளின் தலைவர் இந்திய தேர்தல் முடிவு வரும் வரையில் சமாளிப்பது என முடிவு செய்தார். இவ் வேளைகளின் புலிகளின் தலைவர் ஐ நா, மற்றும் மனித உரிமைகள் அமைப்புடனும் பேசியவாறு இருந்தார். புலிகளின் தலமை தம்முடன் பேசினார்கள் என ஐ நா பேச்சாளர் கூறியிருந்தமை குறிப்பிட தக்கதாகும். அத்துடன் மாவை சேனதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சந்திரகாந்தன் ஆகிய மூவரும் ஜனாதிபதியின் சால்வை சகோதருடன் திரை மறைவில் பேச்சுக்களை மேற்கொண்டு புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி இகசியமாக வெளிநாடு ஒன்றிக்கு தப்பி செல்ல அனுமதிபது குறித்துது பேசியவாறு இருந்தார்கள். இந்திய தேர்தலில் காங்கிரஸ் தோல்வியினை தழுவும், மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சிக்கு அம்மாவின் 40 தொகுதிகள் உதவும் என தமிழக தலைவர்களும் புலி தலைவர்களும் நம்பியிருந்தனர். ஆனால் 16 ஆம் திகதி இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், புலி தலைவர்களும், தமிழக தலைவர்கள் மூவரும் பேய் அறைந்தவர்களாகி போயினர். இறுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் மூவரும் சால்வை சகோதரை நம்ம வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினர். புலிகளின் தலைவர்களை சரண் அடையுமாறும், அரசு அவர்களை இரகசியமாக தப்பி செல்ல அனுமதிப்பார்கள் எனவும் த.தே.கூட்டமைப்பினரும் மூவரும் புலிகளின் தலைவர்களை கேட்டு கொண்டு இருந்தனர். அரசு விரித்த வலைக்குள் புலிகளின் தலமை அகப்பட்டு கொண்டது.

  தமிழக தலைவர்கள், வெளிநாட்டு புலி தலைவர்கள், த.தே.கூட்டமைப்பினர் ஆகியோர் புலிகளின் தலமையின் அழிவிற்கு காரணமாக இருந்துள்ளனர்.

  புது குடியிருப்பிற்குள் படையினர் புகுந்ததும் விடுதலை புலிகளின் புதிய சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் அவர்கள், நோர்வே சாமாதான தூதுவர் ஆகியோர் பிரபாகரனை வன்னியை விட்டு வெளியேற்றுவதற்கான பேச்சுக்களை அரச தரப்புடன் திரை மறைவில் பேசியிருந்தார்கள். இதற்கு ஜனாதிபதியின் இராணுவ உடை சகோதரர் மறுப்பு தெரிவித்து இருந்த போதும், சால்வை சகோதரர் சாதமான பதில்களை கூறியிருந்தார். ஆனால் இந்த பேச்சுக்களை புலிகள் தரப்பு பின்னர் முறித்து கொண்டது. இதற்கு காரணம் யாழ் முன்னாள் மேயரின் புதல்வரும் ஏனைய வெளிநாட்டு புலிகளின் தலைவர்களுமே ஆகும். நாங்கள் வெளிநாடுகளின் அழுத்தம் கொடுத்து எப்படியாவது யுத்த நிறுத்தத்தினை கொண்டு வர முயற்சிக்கின்றோம், நீங்கள் அவசரப்பட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பிரபாகரனுக்கு புலிகளின் வெளிநாட்டு தலைவர்கள் உத்தரவாதத்தினை கொடுத்து இருதார்கள்.எங்கிருந்தும் விடுதலை போராட்டத்தினை தொடர முடியும் நீங்கள் முதலில் நாட்டை விட்டு வெளியே வாருங்கள் என இவர்கள் பிரபாகரனுக்கு அறிவுரை வழங்கியிருந்தால்! அவர் இன்று உயிருடன் இருந்திருக்க முடியும்.

  அடுத்து காங்கிரஸ் கட்சியின் தமிழக அமைச்சர் நோர்வே சாமாதான தூதுவருடனும் அமெரிக்காவுடனும் பேச்சுக்களை மேற்கொண்டு பிரபாகரனை இலங்கை விட்டு தப்பிக்க மேற்கொண்ட முயற்சியினை வை.கோ, தா.பாண்டியன், நெடுமாறன் மற்றும் நோர்வே நாட்டில் வசிக்கும் தமிழ் நெற் இணைய தள நிருபர்களில் ஒருவர் ஆகியோர் குழப்பாது விட்டு இருந்தால் ! சில வேளைகளில் பிரபாகரன் காற்பாற்றப்பட்டு இருப்பார்.இந்த தமிக தலைவர்கள் தமது தேர்தல் நலன்களுக்காக இந்திய தேர்தல் முடிவு வரை காத்திருக்குமாறு கூறி புலிகளின் தலைவரை சாவின் விழிம்பு வரை அழைத்து சென்று இருந்தார்கள்.

  அடுத்து அனுபவ இன்மை காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சந்திரகாந்தன் ஆகியோர் ஜனாதிபதியின் சால்வை சகோதரருடன் இரகசிய பேச்சுக்களை மேற் கொண்டு புலிகளின் தலைவரை படையினரிடம் சரண் அடைய செய்து அரையும் எனைய புலிகளின் தலமையையும் சாவின் கடைசிக்கே அழைத்து சென்று இருந்தனர். செல்வா பண்டா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் என பலரின் கண்முன்னாலே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களேயே இல்லாது செய்த பெரும்பான்மை அரசுகள், திரை மறைவில் பேசும் பேச்சுக்களுக்கு மதிப்பளிப்பார்களா என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிந்திருக்க வேண்டும். அல்லாது விடில் அனைத்து சர்வதேச ஊடகங்கள், மனித உரிமைகள் அமைப்புக்கள் எல்லாவற்றிக்கும் அறிவித்து விட்டு புலிகளின் தலமை படையினரிடம் சரண் அடைந்திருக்க வேண்டும். இதனை செய்திருந்தால் சரண் அடைந்தவர்களை படையினர் ஒவ்வொருவராக சுட்டுக் கொன்றிருக்க மாட்டார்கள்.

  புலிகளின் தலமையின் வரட்டு கெளரவம் அவர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாகி இருந்தது. தாங்கள் சரண் அடைவதாக அனைவருக்கும் அறிவித்து விட்டு, படையினரிடம் சரண் அடைந்தால் தமிழ் மக்கள் மத்தியில் தங்களுக்கு இழிவு ஏற்பட்டுவிடும், தங்களை வெல்ல முடியாதவர்களாக மக்கள் மத்தியில் காட்ட முடியாது போய் விடும் என்பதற்காக ஒழித்து சரண் அடைந்து அப்படியே ஒழிந்து போனார்கள்.

  சூரிய தேவனின் புதல்வன் கர்ணன், அர்ச்சுனனின் அம்பினால் கொல்லப்படுவதற்கு முன்பாக இந்திரன், குந்தி தேவி என வரம் கேட்டு கர்ணனை சாவின் விழிம்பிற்கு அழைத்து சென்று இருந்தார்கள். அதே போன்று புலிகளின் வெளிநாட்டு தலைவர்கள், தமிழக தலைவர்கள் சிலர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மூவர் ஆகியோர் புலிகளின் தலைவரை சாவின் விழிம்பு வரை செல்ல விட்டு இறுதிதியில் படையினரிடம் மாட்ட வைத்து மடிய வைத்துள்ளனர்.

Post a Comment

Protected by WP Anti Spam