ஜப்பான் நிபுணர்கள் குழு நீர்மூழ்கிக்கான சுரங்கபாதையை கட்டியமைக்க புலிகளுக்கு உதவியது.. பிரபல ஆங்கில நாளேடு ‘ஐலன்ட்’ தகவல்..!

Read Time:5 Minute, 30 Second

aniltte2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரழிவைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஜப்பான் நிபுணர்களின் ஒரு குழுவினரே புலிகள் நீர்மூழ்கிக் கப்பலை பயன்படுத்துவதற்காக சுரங்கபாதை ஒன்றை கட்டியமைப்பதற்கான உதவிகளை செய்தது என கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு உன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய பகுதியான புதுக்குடியிருப்பில் செயற் திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காக ஜப்பானிய தூதுக்குழுவினர் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் ஜப்பானிய ஆதரவுடன் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை இலங்கையின் 58வது படையணியால்  கண்டுபிடிக்கப் பட்டதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஐலன்ட் நாளேடு தெரிவித்துள்ளது இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை 360அடி நீளமானதாகவும் 25அடி அகலமானதாகவும் காணப்பட்டதுடன் இதனை அமைக்கும் பணியில் ஜப்பானியர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது அண்மையில் கண்டறியப் பட்டதாகவும் இராணுவ வட்டாரங்களை ஆதாரம் காட்டி குறித்த நாளேடு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் ஐலன்ட் செய்தியில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது விடுதலைப் புலிகளின் தலைமையை இலங்கை இராணுவத்தினர் முழுமையாக அழிப்பதற்கு மூன்றுவார காலத்துக்கு முன்னர் இரட்டைவாய்க்கால் பகுதியில் இந்த சுரங்கப்பாதையைக் கைப்பற்றினார்கள் இந்த பகுதியில் இருந்து கடலுக்குத் மறைத்து செல்வதற்கு இந்த பாதையை பயன்படுத்துவதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தார்கள் அதேபோல் கடற்பகுதியில் இருந்தும் இந்த பகுதிக்கு மறைத்துவரமுடியும் ஆழிப்பேரலை தாக்கிய பின்னர் அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசு பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் புனர்வாழ்வு புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது இந்த சந்தர்ப்பத்தில்தான் நீர்மூழ்கிக்கப்பல்களை செய்வதற்கு ஜப்பானியர்கள் தமக்கு உதவியாக இருந்ததாக விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இருந்த போதிலும் இதன் முதலாவது பரீட்சார்த்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் தரித்து நிற்கும் துருக்கிய கப்பலான பரா3க்கு அண்மையில் புலிகளின் இந்த நீர்மூழ்கிகப்பலை சுழியோடிகள் பின்னர் கண்டுபிடித்தார்கள் இந்த பணிக்கு தேவையாக இருந்த பல்வேறு பொருட்களையும் விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்தார்கள் விடுதலைப்புலிகளிடம் ஜப்பானில் தயாரிக்க்பட்ட மிகவும் சக்திவாய்ந்த வெளிஇணைப்பு இயந்திரங்கள் கதூவீகள் தொலைதொடர்பு சாதனங்கள் உட்பட பல பொருட்கள் இருந்தன வன்னிக்கிழக்கு பகுதியில் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டன ஜப்பானில் வசித்துவந்த ஈழத்தமிழர் ஒருவரும் அந்த நிபுணர்களுடன் இணைந்து பணி புரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 2006ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் போர் தொடங்குவதற்கு முன்னரே அங்கிருந்து வெளியேறி விட்டார். வன்னிப்பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது அவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்து மேலும் பல நிபுணர்களை தமது பகுதிக்கு அழைத்து வந்திருந்ததாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகப் புலனாய்வினர் சுற்றுலாப் பயணிகள்போல் பிரவேசித்துள்ளனர் -திவயின!
Next post மாத்தளை நகரில் போலிப் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அச்சிடும் அச்சகம் முற்றுகை, ஆவணங்கள் மீட்பு