இடம்பெயர்ந்தோர் தொடர்பில் மஹிந்த சமரசிங்கவுடன்; பான்கீ மூன் பேச்சுவார்த்தை

Read Time:2 Minute, 21 Second

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப் பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் துணைபேச்சாளர் மரியா ஒகாபே தெரிவித்துள்ளார். அத்துடன் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட வேண்டியமை மற்றும் முகாம்களுக்குள் தொண்டு பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்குமான நடமாட்ட சுதந்திரம் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இன்னமும் 3லட்சம் பேர்வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை இட்டு கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீமூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் ஜெனீவா தலைமையகத்தில் வைத்து ஊடவியாளர்களை சந்தித்து உரையாற்றும் வேளையிலேயே பான் கீமூன் இதனைத் தெரிவித்துள்ளார் முகாம்களில் நலன்நிலைகள் அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழைகாலத்தில் முகம்கொடுக்க வேண்டிய சவால்கள் குறித்து அச்சமடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டம் தொடர்பான மீளாய்வு நிகழ்வு
Next post யாழ். மாநகர துணைமேயர் பதவி 1வருடத்தின் பின் முஸ்லிம் காங்கிரஸிற்கு..