டெங்குநோய் மீண்டும் தீவிரம் கண்டியில் 30பேர் நாடுமுழுவதும் 245பேர் உயிரிழப்பு
கண்டிமாவட்டத்தில் டெங்குநோய் மீண்டும் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளதாக டெங்குநோய் தடுப்பு மத்திய நிலையம் அரச இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக டெங்குநோய் பரவுவது கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதும் தற்போது பெய்துவரும் மழை காரணமாக நுளம்புகள் பெருகி நோய் பரவுவது அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. கண்டி மாவட்டத்தில் நேற்றுவரை 3249பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரையில் இம்மாவட்டத்தில் 30பேர் இந்நோய் காரணமாக மரணம் அடைந்துள்ளனர் நாடு முழுவதிலும் இதுவரை 24ஆயிரத்து 984நோயாளிகள் இனங்காணப் பட்டுள்ளனர். 245பேர் மரணமடைந்துள்ளனர். கேகாலை கம்பஹா கொழும்பு குருணாகல் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் டெங்குநோய் பரவுவதாக நோய்த் தடுப்பு மத்திய நிலையம் அறிவித்ததாக அந்த இணையத்தளம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.