மலையக பிரதேசத்தில் இரண்டு தமிழர்கள் சடலங்கலாக மீட்பு!!

Read Time:1 Minute, 59 Second

மலையகத்தின் மஸ்கெலியா பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அவர் விறகு சேகரிப்பதற்கு சென்றதன் பின்னர் வீடு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்கம்பியில் சிக்கியே அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இவ்வாறு மீட்கப்பட்டவர் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.ஜெயக்குமார் (வயது24) என அடையாளம் காணப்பட்டுள்ளது மலையகத்தின் பெரும்பாலான வனப்பிரதேசங்களிலும் அதனை அண்டியப் பகுதியிலும் தமது குடியிருப்புக்களை கொண்டுள்ள அரசாங்க உயர் அதிகாரிகளும் பெருந்தோட்ட முகாமையாளர்கள் போன்ற தனவான்களும் இவ்வாறு விலங்குகளை வேட்டையாடுவதற்கு சட்டவிரோதமான பாதுகாப்பு அற்ற முறையில் மின்சாரம் பாயும் கம்பிகளை பொருத்தியுள்ளனர் இவற்றில் அகப்பட்ட ஏராளமான மலையக தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை மஸ்கெலியாவின் பயணிகள் பேருந்து ஒன்றில் இருந்து மற்றுமொரு தமிழரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது அவரின் சடலம் இதுவரையில் அடையாளம் காணாதவிடத்தும் மஸ்கெலியாவின் ஸ்டப்பி தோட்டப் பகுதியைச் சேர்ந்த ஒருவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் கைது!!
Next post சுவிஸில் பூணூல் போடாத பூசாரிகள் முள்ளி என்றும், வன்னி என்றும் மீண்டும் ஆடும் கூத்தாட்டம்! (கட்டுரை)