வைகோ, விஜயகாந்த், திருமா, எல்டிடிஇயிடம் பணம் வாங்கினர் – சொல்கிறார் சாமி
விடுதலைப் புலிகளிடம் இருந்து மதிமுக பொது செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 27 அரசியல் கட்சி தலைவர்கள் பணம் வாங்கியதாக ஐனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். இந்தியாவில் இருக்கும் 27 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் விடுதலை புலிகளிடம் இருந்து பணம் பெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இது இலங்கையில் இருந்து ஆதாரப்பூர்வமாக கிடைத்துள்ளது. அவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் , மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரும் அடங்குவர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே நீதிமன்றத்துக்கு சென்று இதை அம்பலப்படுத்துவேன்.