சுவிஸில் பூணூல் போடாத பூசாரிகள் முள்ளி என்றும், வன்னி என்றும் மீண்டும் ஆடும் கூத்தாட்டம்! (கட்டுரை)

Read Time:13 Minute, 28 Second

ANI.SWISS.gifசுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் எழுப்பி வரும் கேள்விகள் பல விபரீதமான சர்ச்சைகளை உருவாக்கும் என எதிர்பர்க்கப்படுகின்றது. “ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும் உள்ள புலிகளின் காரியாலயங்கள் நடாத்தும் நிர்வாகத்திற்கும் வன்னியில் இயங்கிய நிர்வாகத்திற்கும் அதிக தொடர்புகள் இருக்கவில்லை என்ற செய்திகள் கடந்த காலத்தில் பல ஊடகச் செய்தியாக வெளியானதை அடுத்தே இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் தனித்தனியாக இயங்கிய குழுவினராகவே பெரும்பாலானவர்கள் பிரபாகரனின் பெயரை வைத்து தமது சுயலாபத்தை மட்டுமல்ல பொய்யான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருவதாகக் கடும் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது. இதனால் இன்று, சுவிட்சர்லாந்து தமிழர்கள் தாம் தெரியாது தமது பணத்தை வீணாக்கி விட்டோம் என்ற மனக்குமுறல்களில் உள்ளார்கள். இந்த வேதனையை புலிகளின் பிரதிகள் மேல்காட்டுவார்களா? மோதல்கள் ஏற்படுமா?? என்ற அச்சம் தற்பொழுது எழுந்துள்ளது. இதனால் இங்கு நடக்கும் பல ஒன்றுகூடல்களுக்கு மக்கள் சமூகமளிப்பது குறைவாகவே இருக்கின்றது. முன்பு கோவில்களில் அடித்த கொள்ளைப் பணத்தை பல முதலீடுகளுக்கு வங்கி என்றும் இந்தியா என்றும் மற்றும் தமது சொந்தங்கள் மூலம் நடத்திவரும் போலி அம்மன், போலிசக்தி கூட்டங்கள். இன்று மீண்டும் கொள்ளையடிக்க முள்ளிவாய்க்கால் அகதிமுகாம்களுக்கு பணம் என்றும் சிடி வெளியீடு என்றும் மற்றைய அகதிகள் மேல் அனுதாபங்களை காட்டி மக்களை ஏமாற்றும் செயல் தொடர ஆயத்தம் செய்வதாக பல செய்திகள் வெளியாகிக் கொண்டுள்ளது. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் வெளிநாடுகளில் உள்ள இலங்கை இராஐதந்தி ஒருவரின் முக்கிய தலையீடும் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் பிரதிகள் மட்டும்; இருந்தால் தான் இலங்கைக்குள் பொதிகளோ அல்லது பணமோ அனுப்ப முடியும் என்ற சட்டமுறைகள் இன்று உண்டு இவைகள் எப்படி புலிகளுக்கு அல்லது புலிப்பினாமிகளான இவர்களுக்கு கிடைத்தது? எப்படி இவர்கள் அகதிகளை சொல்லி பணம் சேர்ப்பார்கள்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக புங்குடுதீவை மையமாக வைத்து தமது சொந்த மக்களையே ஏமாற்றி பணம் புடுங்கியவர்கள். தீவின் மண்வாசனையையும் அதன் மகிமையையும் மறந்து செயல்படுகின்ற கவலை அப்பகுதி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எமது நாட்டின் மகிமை கிராமங்களை அண்டியும், தீவுகளை அண்டியுமே பாரம்பரியம் கட்டிக் காக்கப்பட்டது என்ற வரலாற்றை இத்தகைய மூடர்கள் முற்றாக தாழ்த்தி வருவது கவலைக்குரிய விடையம் மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டும் என்று வலிந்துள்ளார்கள்.

இந்த அம்மன், சக்தி கோவில் விடையமாக நான் பலரை நேரடியாக சந்தித்து கேட்ட பொழுது பலர் அபிப்பிராயங்களை தெரிவித்தார்கள்: இதில் ஒருவர் கூறினார் “இன்று புலம்பெயர்ந்த நாடுகளில்; வாழும் இளைய சமூகம் முற்றாக மாறிவிட்டது. இது பெற்றோர்கள் செய்த கள்ளத்திட்டமும் அவர்களில் கள்ளவேலையின் பிரதிபலிப்பாகவே உள்ளது. நாம் தமிழர்கள் என்று தம்மை காட்டிக் கொள்ளாத அளவுக்கு இன்றைய வெளிநாட்டு இளைய சமூகம் வாழப் பழகியுள்ளது. இந்தநிலை ஏன் ஏற்பட்டது? என்று இந்த மூடர்கள் தமது நிலையை எண்ணி தமது போக்கை திருத்தாவிட்டால் தமிழர்களாகிய நாம் எமது சமூக வாழ்வுக்காக இந்த முறைகெட்டவர்களை திருத்த வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுகின்றோம்” என்று குறிப்பிட்டார்.

“மற்றைய சமூகத்தை விட நாம் மிகவும் புத்திசாலிகள் அல்லவா? ஆனால் எமது சமூக இளையவர்கள் இன்று சீரழிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தலைமுறைகள் தடுமாறுகின்றது. என்பதற்கு இந்த பிரியர்கள் விடைகாணாது தொடர்ந்து தமது பிழைகளை செய்து தமிழர்களை ஏமாற்றி கொள்ளையடிப்பதை எப்படி நாம் சகித்துக் கொள்ள முடியும்? இதை இன்று முறைகெட்ட ஊடகங்கள் பகிரங்கப்படுத்த தவறி விட்டது. கூத்துப்போடும் அரசியலுக்கு சேர்ந்து கும்மாளம் கொட்டி, கைதட்டி, பிணங்களை வைத்து சம்பாதிக்கும் நிலை ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது இந்திய சினிமாவை விட கேவலமான நிலையாகவே தான் இன்று எமது வாழ்வு உள்ளது. இந்த பொய்யான பிரச்சார வீணர்கள் இன்றும் திருந்தாவிட்டால் பல விபரீதமான சர்ச்சைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். இந்தநிலை பற்றி நான் சுவிட்சர்லாந்து அரச அதிகாரிகளுடனோ அல்லது சட்டவல்லுனர்கள் முன் வந்து எனது ஆதாரங்களை முன்வைத்து நீதிகேட்க தயாராக உள்ளேன்” என்றும் குறிப்பிட்டார். “அன்றுதான் இந்த கோவில்கள் எல்லாம் பல பிரச்சனைக்கு முகம் கொடுக்கும் என்பதும் உறுதியாகும்” என்றார்.

“குறிப்பாக ஒரு இணையதளத்தில் வந்த செய்தியையும் அதன் படங்களையும் காட்டினார். இந்தகைய பிரச்சார இணையதளங்கள் நூல்அறுந்த பட்டம் போல் காற்றடிக்கும் பக்கம் சாய்வது தமது கௌவுரவம் என்று எண்ணி, இவர்கள் ஈனத்தனமாக எமது இளைய சமூகத்தை கேவலம் செய்கின்றனர். மானம்கெட்டவர்களால் எழுதப்படும் ஊடகங்களும் வைத்தியசாலைகளில் மையக்காம்பிரா தொழில்களை செய்கின்றவர்களை விட கேவலமாக நடந்து கொள்கின்றார்கள் என்றும் தமிழர்கள் இதயசுத்தி கொண்ட மனதால் எழுதும் செயல்கள் சமூகத்திற்கு ஒரு வழிகாட்டியாகவே அமைய வேண்டும்” என்றார்.

ஆம் வசகர்களே! உண்மை தான்!! இன்று பல ஊடகங்கள் கடந்த காலத்து போராட்ட கொலைகளை பிரசுரித்து வருகின்றது. இதில் உண்மைகள் உண்டு என்றால். படம் எடுத்தவரின் பெயர்? எந்த இடத்தில் நடந்தது? என்ற விபரங்கள் எடுத்த திகதிகளோடு இணைந்து இருக்க வேண்டும். மேலும் எந்த படைபிரினரால் நடத்தப்பட்டது என்ற விபரங்கள் குறிப்பிட வேண்டும். அப்படியாக எந்த ஒரு ஊடகமும் பிரசுரிப்பதில்லை.

எமது மக்கள் கொலை செய்வதை எவரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எமது உரிமைக்கு என்றும் குரல் கொடுக்கும் ஊடகங்கள் பல உண்டு. உண்மைகளை எழுதும் ஆக்ககாரர்கள் உண்டு. உயிரை பணயம் வைத்து பல ஆதாரங்கள் திரட்டும் மாற்று கச்சி ஊடகங்களும் உண்டு. அவர்கள் மனித உரிமைக்கு போராடும் நீதிமான்கள் என்பதால் ஒருவர் சார்பாக கொடி பிடிக்க முடியாது. ஆனால் பதிவுகளை பிரதிகளை ஆதாரங்களை பலர் கையளித்து நீதிகேட்டும் வருகின்றார்கள் என்பதை ஒருபக்கசார்பாக எழுதும் ஊடகங்கள் சிந்திக்கவேண்டும். குறிப்பாக 1983ம் ஆண்டு தொடக்கம் இலங்கையில்; வவுனியா யோசப் இராணுவமுகாமில் பல இளைஞர்களும் யுவதிகளும் சுடப்பட்டு உமிகள் நிரப்பி எரிக்கப்பட்ட பழைய கிணறுகளில் போடப்பட்டார்கள் என்ற ஆதாரங்கள். இவைகள் யாரால் எப்பொழுது எந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டது என்று ஆதாரங்கள் சர்வதேசத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இப்படியான தமது உயிரைப்பயணம் வைத்து எடுத்த பதிவுகள் ஆயிரம். ஆனால் இன்று குப்பை கொட்டும் இணையதளங்களும் ஊடகங்களும் ஊரார்களின் பணத்தை சூரையாட எண்ணி, சுயநலத்திற்காக சோரம் போகும் தமிழர்கள் என்றுமே தமது உரிமைக்குப் போராடுபவர்கள் அல்ல. இது ஒருவியாபார மாயை என்பதை பகிரங்கமாக சுட்டிக்காட்ட நான் விரும்புகின்றேன்.

மேலும் அமெரிக்கர்களால் கொடுமைப்படுத்தி கொலைக் குற்றத்தில் தூக்கிய சதாமை பல சர்வதேசத்து ஊடகங்கள் விமர்சித்தது மட்டுமல்ல கண்டித்தது. இதேபோல் கடந்த காலத்தில் யூக்கோசிலோவிக்கியா, கூர்ட்டிஸ்தான் தலைவர் பற்றி சர்வதேசத்து ஊடகங்கள் கேள்விகள் எழுப்பின ஆனால் இலங்கை விடையத்தில் அப்படி நடக்கவில்லை என்பதை நாம் கவணத்தில் கொள்ள வேண்டும். இதற்கு காரணம் தமிழர்கள் விழிப்புணர்வு அடித்தளத்தை சரியான முறையில் சரியான இடத்தில் அமைக்கவில்லை. தமது சுயலாபத்தை நோக்கியே உணர்வலைகளை அமைத்தார்கள் என்பது தான் உண்மை.

அதேசமயம் அமெரிக்க இராணுவம் செய்த கொடுமைகளையும் சிறையில் நடத்திய அசிங்கத்தையும் படம்பிடித்து பகிரங்கமாகவே பிரசுரம் செய்தார்கள். இதனால் அந்த இராணுவ அதிகாரியான பெண்ணுக்கு இராணுவத் தண்டணையை வாங்கியும் கொடுத்தார்கள் என்பது கடந்த காலத்தில் எமக்கு தெரிந்த தெளிவான உண்மைகள். இதை நடத்தியது தனிமனித சுதந்திரம் பெற்ற படப்பிடிப்பாளர்கள் மற்றும் தனியான ஊடகங்களும் தான் என்பது யாவரும் அறிந்த உண்மை. புலம்பெயர்ந்த தமிழர்கள் அறியாது போனது ஏன்?

வெளிநாடுகளில் இப்படியான செய்திகளை நாம் தினம்தினம் அறிந்துள்ளோம். ஆனால் தமிழர்கள் தமது ஊடகங்களையும் தமது பாரம்பரியத்தையும் அசிங்கப்படுத்தும் அளவுக்கு படங்களை போடுவதும். உயிரை துச்சமாக மதித்த போராளிகளையும் மற்றும் ஏழ்மையில் இருந்த குடும்ப யுவதிகளை இழுத்துச் சென்ற விடுதலையின் அசிங்கத்தையும் இன்று புலம் பெயர்ந்த சோனகிரிகள் அம்பலப்படுத்தி வருகின்றார்கள் என்பது கண்டிக்கத்தக்கது.

தமிழர்கள் மலையாக நம்பி இருந்த தலைவரையே ஏமாற்றி கொலை செய்த இந்த பணப் பிசாசுகள் மீண்டும் தமிழரை ஏமாற்று படுகுழியில் தள்ளுவதை ஒருபொழுதும் ஏற்கக்கூடாது. அதேபோல் அரச இராணுவத்தின் மேல் சேறு பூசுவதாக எண்ணி தமிழர்களின் பாரம்பரியத்தின் மேல் சேறுபூசும் சோனகிரிகளும் அவர்களின் ஊடகங்களும் முற்றாக புறக்கனிக்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்துகின்றேன் என்றார் தமிழ்ஏடு ஆசிரியர்.
ஆக்கம்.. தமிழ்ஏடு ஆசிரியர்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலையக பிரதேசத்தில் இரண்டு தமிழர்கள் சடலங்கலாக மீட்பு!!
Next post திங்கட்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு!