மிதிவெடி அகற்றும் இயந்திரங்களை இலங்கை அரசு கொள்வனவு!

Read Time:2 Minute, 8 Second

வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை விரைவு படுத்தும் வகையில் செலோவாக்கிய அரசாங்கத்திடமிருந்து இலங்கை அரசு 250 மில்லியன் ரூபா பெறுமதியான மிதிவெடிகளை அகற்றும் இயந்திரங்கனை கொள்வனவு செய்துள்ளது இவ் இயந்திரங்களை மிதிவெடிக அகற்றும் பணிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் நேற்றுக்காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சரத்குமார குணவர்தன தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே.குமாரசிறி ஆகியோர் பாதுகாப்பு உயரதிகாரி மேஜர் ஜெனரல் தீபால் அல்விஸிடம் இவ்வியந்திரங்களை கையளித்தனர் இந்நிகழ்வின்போது கருத்து தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வன்னியில் இடம்பெயர்ந்த தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை விரைவாக மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமென தெரிவித்தார் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர் அதனை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளுக்காகவே ஐந்து புதிய இயந்திரங்களை அரசாங்கம் செலோவாக்கியாவிலிருந்து கொள்வனவு செய்துள்ளதாகவும் மேலும் சில இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராமேஸ்வரம் கடற்கரையில் அநாதரவாக நின்றிருந்த ஒருவரை தமிழகப் பொலீசார் மீட்பு!!
Next post மட்டக்களப்பில் சிங்கள மருத்துவர் கொலை தொடர்பில் புலிச் சந்தேகநபர் கைது!