கெப் கொலரடோவின் (வணங்காமண்) 880மெட்றிக் தொன் நிவாரணப் பொருட்களின் காலாவதித் தன்மை தொடர்பாக சிக்கல்..!

Read Time:2 Minute, 3 Second

வன்னி மக்களுக்காக புலம்பெயர்ந்த மக்களினால் அனுப்பப்பட்ட கெப் கொலரடோ கப்பலில் கொண்டு வரப்பட்ட 880மெட்றிக் தொன் நிவாரணப் பொருட்களின் காலாவதித் தன்மை தொடர்பாக சிக்கல் தோன்றியுள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர்நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவிக்கையில், கேப் கொலராடோ கப்பலினால் கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்கள் 27 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூலைமாதம் 31ம் திகதிமுதல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் கொள்கலன்களுக்குள்ளே காணப்படும் உலர் உணவுப்பொருட்களின் காலாவதி தொடர்பாக கண்டறிய வேண்டியுள்ளது. அப்பொருட்களை மனிதபாவனைக்கு உகந்ததா? என பரிசோதிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, மேற்படி நிவாரணப் பொருட்கள் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதால் களஞ்சியக் கூலியாக ஆகஸ்ட் மாதத்திற்கு மாத்திரம் 6.5மில்லியன் ரூபாவை துறைமுக அதிகாரசபைக்கு செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, நிவாரணப்பொருட்களை காலதாமதமின்றி வவுனியாவுக்கு எடுத்துச் சென்று இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும் -ஜாதிக ஹெல உறுமய
Next post பலவந்தமாக அவுஸ்திரேலியாவிலிருந்து நான்காவது இலங்கையர் நாடுகடத்தல்